நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நாளை(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் வன்னி தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக வவுனியா மாவட்டத்தில் 134 வாக்களிப்பு நிலையங்களில் 109705 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இதற்காக வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்கு சீட்டுகள் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு தலைமைதாங்கும் உத்தியோகத்தாகளின் பொறுப்பில் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வாழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் வாக்கு பெட்டிகள் எடுத்துச்செல்லப்படும் முறைகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பு குழுவை சேர்ந்த கண்காணிப்பாளர்களும் கண்காணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment