மிரிஹான வெள்ளைவான் சம்பவத்துடன் புலிகளை தொடர்புபடுத்தி அரசியல் இலாபம் தேடுவதற்குரிய முயற்சியில் பிரதான இரு அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மிரிஹான பகுதியில் வெள்ளைவானில் துப்பாக்கியுடன் சிவிலுடையில் சென்று கொண் டிருந்த இராணுவத்தினர் மூவர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்ட விவகாரம் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தேர்தல் காலம் என்பதால் அந்த பரபரப்பை தணியவிடாது இந்த விடயத்தை அரசியல் கட்சிகள் பூதாகரமாக்கி வருகின்றன. குறிப்பாக இது புலிகளுடைய வாகனம் எனவும், மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கே இவ்வாறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
புலிகளை அழித்த மஹிந்தவை கொல்வதற்கு புலி ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர் எனவும், அதற்கு அரசும் ஒத்துழைப்பு வழங்குகின்றது என்றதொரு தோற்றப்பாட்டை உருவாக்கி மக்களிடம் வாக்குவேட்டை நடத்துவதற்காகவே வில் வீரவன்ஸ உள்ளிட்ட சிலர் இப்படி கதை கூறி வருகின்றனர் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, மிரிஹானை பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட வெள்ளை வான் புலிகளால் பயன்படுத்தப்பட்டு, பின்னர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வான்களில் ஒன்றே இவ்வாறு மிரிஹானையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.
அதாவது, மேற்படி சம்பவம் எதிரணியால் திட்டமிடப்பட்டதொன்று எனவும், தமக்கு புலிகளுக்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டு அரசியல் இலாபம் தேடுவதற்குதான் இவரும் முயற்சிக்கிறாரே ஓழிய உண்மை என்ன வென்பதை கூறவில்லை எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் புலிகள் உடையதா அல்லது இராணுவத்தின் உடையதா என்பது விசாரணைகளின் பின்பே தெரியவரும் என இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment