இலங்கையில் இணைய கருத்து சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு எட்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அமைப்புக்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.
இணைய கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ரெலிகிராப் இணைய தளம் முடக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
0 comments:
Post a Comment