தமிழீழ விடுதலைப் புலிகளின் 767 வாகனங்களை இராணுவம் பயன்படுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட வாகனங்களே இவ்வாறு பயன்பபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இந்த வாகனங்களை இராணுவ இலக்கத்தகடுகளுடன் பயன்படுத்த அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்ஸ அனுமதி வழங்கியுள்ளார்.
அண்மையில் மிரிஹான பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வெள்ளைவான் மற்றும் மூன்று இராணுவப் படைவீரர்கள் தொடர்பில் கருத்துவெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக மிரிஹான பிரதேசத்திற்கு சென்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, தனது கைத்துப்பாக்கியை மெய்ப்பாதுகாவலரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட பயணமொன்றுக்கு செல்லும்போது துப்பாக்கி எடுத்துச் செல்வது பொருத்தமற்றது என்பதனால் துப்பாக்கியை மெய்யப்பாதுகாவலரிடம் ஒப்படைத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை வானில் சென்று எந்தவொரு நபரையும் அச்சுறுத்தும் செயலாக இதனை கருத முடியாது எனவும் இந்த சம்பவத்தில் அரசியல் செயற்பாடுகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் நெருங்கிய நண்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment