கோத்தபாயவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சுறா வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்கு 2300 லட்சம் ரூபாவினை அரசாங்கம் செலவிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாதயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இறக்குமதி வரி இன்றி தருவிக்கப்பட்ட 03 லெம்போகினி வாகனங்களை இரகசியமாக மீண்டும் நாட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான தகவல்கள் வெளியாகிய பின்னர் வங்கி பிணை எடுப்பதற்காக 2780 லட்ச ரூபா பணம் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவின் சிரிலிய கணக்கில் ஊழல் இடம்பெற்றதாக கூறப்படுவது பொய் என்று கூறினார்கள்.
150 மில்லியன் பணத்தினை புற்றுநோய் இயந்திரங்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் சிரிலிய கணக்கிற்கு வழங்குமாறு கோரி அனுப்பிய கடிதம் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் கூறினார். அதற்கான ஆதாரத்தையும் செய்தியாளர்களுக்கு காட்டினார்.
சிரிலிய கணக்கு தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணைகள் நடத்தப்படும்.
இவ்வாறான பாரிய அளவிலான ஊழல் தொடர்பில் தடையின்றி ஆராய்வதற்கும், ஆராய்வின் மூலம் சுரண்டப்பட்ட மக்கள் பணத்தினை மீளவும் மக்களிடம் ஒப்படைப்பதற்கு பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்குமாறு நிதியமைச்சர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
tamilwin
tamilwin
0 comments:
Post a Comment