பல்கலைக்கழக மாணவர் விடுதலை தொடர்பில் அதிகார வரம்பினை மீறி செயற்பட முடியாது

அவசரகால சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் விடுதலை விடயத்தில்
தனது அதிகார வரம்பினை மீறி செயற்பட முடியாது என்று யாழ்.மாவட்டகட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இந்த விடயத்தினை நீதிமன்றமே மேலதிக நடவடிக்கை எடுக்கும் என்றும், சட்டமா அதிபரிடத்தில் இவ்விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் தீர்மானத்திற்கு ஏற்பட பீடாதிபதிகள் மற்றும் பதிவாளர் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியை இன்று பலாலியில் சந்தித்தனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோரின் விடுதலை தொடர்பில் இந்தச் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.
நாட்டின் நிலவும் தற்போதய சூழ்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கையினை மீளவும் ஆரம்பிப்பதற்கு இராணுவத்தின் உதவி அவசியமானது என பீடாதிபதிகள் யாழ்ப்பாண மாவட்டத் தளபதியிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதனால் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பினை கோருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 3ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றபோது சில விரும்பத்தகாத விடயங்கள் இடம்பெற்றதனை இராணுவத் தளபதியிடம் தெரிவித்த அவர்கள் அந்த விடயங்கள் தமக்கு மன வேதனையை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, தனது அதிகார வரம்புக்கு உள்பட்ட விடயங்களை தாம் செய்து தருவதாக உறுதியளித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல இலங்கையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்ற ஒரு தேடுதலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னறிவிப்புடேயே நடத்தப்பட்டது. ஆகவே அங்கு வைக்கப்பட்டிருந்த ஒளிப்படங்கள், பதாகைகளை அகற்றியிருக்க உங்களால் முடியவில்லையா?
மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபி, மாவீரர் நினைவு தூபி என்பன நிர்வாகத்தின் அனுமதியுடனா அமைக்கப்பட்டன என்பது தொடர்பிலும் இராணுவத்தளபதி கரிசனையுடன் கேட்டறிந்து கொண்டார்.

Thank you: thinakkural

About the Author

Yaso vinayak

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com