சூர்யகுமார் யாதவ் அதிரடி: முக்கியப் போட்டியில் மும்பை இந்தியன்சிடம் வீழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ்

12-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதியாட்டத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெறும் பிளே ஆஃப் சுற்றுப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.
132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணி, இரண்டாவது பந்திலேயே அதன் கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தது.
இதை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக்கும் ஆட்டமிழந்தார். ஆனால் இதன் பின்னர் மும்பை அணி சாதுர்யமாக விளையாடி பெரிதும் விக்கெட்டுகளை இழக்காமல் ரன் குவித்தது.
இறுதியில் 18.3 ஓவர்களில் மும்பை அணி தனது இலக்கை எட்டியது.
சிறப்பாக விளையாடிய மும்பை அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் 54 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி தோற்றதற்கு 5 முக்கிய காரணங்கள் குறித்து பார்ப்போம்.

டாஸ் - தோனியின் முடிவு சரியா?

சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றவுடன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது பலருக்கும் வியப்பை அளித்தது.
மும்பை அணியில் போலார்ட், ஹர்திக் பாண்ட்யா போன்ற பல பின்வரிசை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதால், குறைந்தளவு ஸ்கோரை சென்னை அணி கட்டுப்படுத்த மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளும் என்ற கணிப்பு இந்த போட்டியில் பலித்தது.

131 - போதுமான இலக்கா?

சென்னை அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த மைதானத்தில் 150 முதல் 160 ரன்கள் வெற்றி இலக்காக அமைந்திருக்கும்.
ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா குயின்டன் டி காக் போன்ற பல அதிரடி பேட்ஸ்மேன்கள் மும்பை அணியில் உள்ள சூழலில் 132 என்ற இலக்கு அந்த அணிக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை.

சிம்ம சொப்பனமாக விளங்கிய சூர்யகுமார் யாதவ்

இந்த போட்டியில் ரோகித் மற்றும் டி காக் ஆகிய இருவரும் விரைவில் ஆட்டமிழந்தாலும், வெற்றிக்கும் சென்னை அணிக்கும் இடையில் இருந்தது சூர்யகுமார் யாதவ்தான்.
4-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த மும்பை மேலும் ஒரு விக்கெட்டை அந்த சூழலில் இழந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கக்கூடும்.
மிக சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 54 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவே மும்பை அணி 18.3 ஓவர்களில் வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மும்பை -சென்னை அணியின் சுழல்பந்துவீச்சாளர்களின் தாக்கம்

இந்த போட்டியின் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது சிஎஸ்கே அணியின் சுழல்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு.
சென்னை அணியின் சுழல்பந்துவீச்சாளர்கள் ரன் கொடுக்காமல் சிறப்பாக பந்துவீசியபோதும், முக்கிய தருணங்களில் விக்கெட் எடுக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இம்ரான் தாஹீர் எடுத்த 2 விக்கெட்டுகள் ஆட்டத்தின் பிற்பகுதியில் நடந்ததால் , அது போட்டியின் முடிவை பெரிதும் பாதிக்கவில்லை.
சிஎஸ்கே அணியை கலங்கசெய்த ராகுல் சாஹர்
முதலில் பேட் செய்த சென்னை அணி முதல் 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்த போதும், அந்த அணியை சரிவில் இருந்து மீட்க முரளி விஜய் மற்றும் அம்பத்தி ராயுடு ஜோடி பெரிதும் முயன்றது.
இதேபோல் இறுதிக்கட்டங்களில் தோனியும் முயன்றார்.
ஆனால், இவர்களின் முயற்சிகளை பெரிதும் கட்டுப்படுத்திய ராகுல் சாஹர், தான் பந்துவீசிய நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது சென்னை அணியின் ரன்விகிதத்தை பெரிதும் பாதித்தது.
முன்னதாக, டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தனது அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
ஆனால், சிஎஸ்கே அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மூன்றாவது ஓவரில் டூ பிளெசிஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 5 ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில் ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மிக விரைவிலேயே ஷேன் வாட்சனும் ஆட்டமிழக்க, 6 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே பெற்று சென்னை அணி தடுமாறியது.
இதன்பிறகு முரளி விஜய் மற்றும் அம்பத்தி ராயுடு ஜோடி சென்னை அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டது.
ஆனால், சென்னை அணியின் ரன்விகிதம் பெரிதும் உயரவில்லை. மும்பை அணி பந்துவீச்சாளர்கள் இடைப்பட்ட ஓவர்களில் பெரிய அளவில் ரன் கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசினர்மும்பை அணியின் பந்துவீச்சாளர்களில் ராகுல் சாஹர் மிக சிறப்பாக பந்துவீசினார். அவர் பந்துவீசிய நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது சென்னை அணியை பெரிதும் கட்டுப்படுத்தியது.
சென்னை அணி வீரர்களில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். கேப்டன் தோனி 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணியால் 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தொடக்க அதிர்ச்சியில் இருந்து மீண்ட மும்பை

மிக எளிய ஸ்கோரை துரத்துவதற்கு களம் புகுந்த மும்பைக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இன்னிங்சின் முதல் பந்தில் ராகுல் சஹர் பந்தை எதிர்கொண்டு 4 ரன் எடுத்த மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
12 பந்தில் எட்டு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் இன்னொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆன, டி காக்கும் அவுட் ஆனார். ஆனால், இந்த ஆரம்ப கட்ட அதிர்ச்சிகளில் இருந்து மும்பை கலங்காமல் மீண்டு வந்தது.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஆட்டம் முடியும் வரை களத்தில் இருந்தார். அவரும் 28 பந்தில் 31 ரன் எடுத்த இஷான் கிஷானும் ஆட்டத்தை லாவகமாக சென்னையின் கையில் இருந்து பறித்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 80 ரன் எடுத்தது. மும்பை அணியின் ஸ்கோர் 101 ரன்களைத் தாண்டிய நிலையில் இஷான் கிஷான் விக்கெட்டை இம்ரான் தாஹிர் பறித்தார். அடுத்து ஆட வந்த குணால் பாண்டியா ரன் ஏதும் எடுக்கும் முன்பே பெவிலியன் அனுப்பிவைத்தார் தாஹிர். ஆனால், தாஹிர் இந்த அதிர்ச்சிவைத்தித்தை தரும்போது மும்பை ஸ்கோர் வெற்றி இலக்கை நெருங்கிவிட்டிருந்தது.
ஆட்டத்தின் முடிவில் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் மளமளவென சரிந்தது குறித்து குறிப்பிட்ட தோனி, அடுத்த ஆட்டத்தில் இது நடக்காது என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
Thank you:BBC TAMIL

About the Author

Yaso vinayak

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com