இதற்கமைய வருகின்ற 11ம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிளவில் வவுனியா பொது கலாசார மண்டபத்தில் இன் நிகழ்வு ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது .இன் நிகழ்வுக்காக அனைத்து விடுதலை அமைப்புக்களையும் மற்றும் அரசியல் கட்சிகளையும் நேரில் சென்று கட்சி பேதமின்றி இன் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அதை அக் கட்சியின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு அன் நிகழ்வில் கலந்து கொள்வதாக தெரிவித்ததாகவும் ஈரோஸ் அமைப்பின் ஊடகதுறை பொறுப்பாளர் சு.ராஐகோபால் தெரிவித்தார் .அது மட்டுமின்றி யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவ ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டதை கண்டிப்பதாகவும் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார் .மேலும் பாக்கிஸ்த்தான் நாட்டில் இருந்து அகதிகளாக கொண்டுவரப்பட்ட மக்களை வவுனியாவில் முகாம்கள் அமைத்து தங்க வைக்க அரசாங்கம் முயல்வதாகவும் இச் செயட்பாடு வடக்கிற்கு பொருத்தமானது அல்ல என்றும் ஏனைய 8 மாகாணங்களிலும் இவ் அகதி முகாமிட்கான வளங்கள் இருப்பதாகவும் அங்கே அவர்களை குடி அமர்த்துமாறும் இதை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஒரு அறிவித்தளையும் அவர் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
0 comments:
Post a Comment