இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் நடைபெற்றது.
இன்று மாலை (03.04.2018) வவுனியா வைரவர் புளியங்குளத்தில் உள்ள ICC கல்லூரியின் விரிவுரை மண்டபத்தில் இணைய ஊடகவியலாளர் சங்க தலைவர் நடராசா ஜனகதீபன் அவர்களின் தலமையில் ஆரம்பமான இப்பொதுக்கூட்டத்தில் இணைய ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் புதிதாக உள்வாங்கப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் இணைய ஊடக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
விசேட பிரதிநிகளாக சட்டத்தரணிகளான அருனகிரிநாதன் திலீப்காந்தன், சட்டத்தரணி ரவீந்திரனாதன் கீர்த்தனன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் வடமாகாணத்தின் சிரேஷ்ட சட்டத்தரணிகளில் ஒருவரான அன்ரன் புனிதநாயகம் அவர்களுடைய சார்பில் அவரது பிரதிநிதியும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் கடந்தகால எமது செயற்பாடு தொடர்பாக முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் உரையாற்றிய பின் சட்டத்தரணிகள் தலமையில் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.
இதனடிப்படையில் புதிய நிர்வாக சபையில் செயலாளராக அருள், தலைவராக பரராசசிங்கம் கனிசியஸ், பொருளாளராக பாஸ்கரன் கதீசன், உபதலைவராக பாலநாதன் சதீசன், உப செயலாளராக பிரதீப் அவர்களுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக பொன்னுத்துரை அரவிந்தன் மற்றும் சசி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்
இதேவேளை இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் போசகராக சிரேஷ்ட சட்டத்தரணிகளில் ஒருவரான அன்ரன் புனிதநாயகம் அவர்களும் ஆலோசகர்களாக சட்டத்தரணிகளான திலீப்காந்தன், கீர்த்தனன் அவர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
இறுதியாக புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட கனீசியஸ் அவர்களின் உரையுடன் பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது
0 comments:
Post a Comment