1989க்கு பின் “ஈழவர் ஜனநாயக முன்னணி” யும் ஈரோஸ் அமைப்பும்

ஈழப் புரட்சி அமைப்பின் (ஈரோஸ்) அரசியல் முன்னணியான “ஈழவர் ஜனநாயக முன்னணி” யின் புதிய
நிர்வாகக் குழு தெரிவும் அதனைத் தொடர்ந்து  உதய  சூரியன் சின்னத்தில் உள்ளுராட்சி தேர்தலில் கூட்டமைத்து களமிறங்க தீர்மானித்தது வரையான அறிக்கை:

“ஈரோஸ்”  எனப்படும் ஈழப்புரட்சி அமைப்பு 1975ம் ஆண்டு   ஆரம்பிக்கப்பட்டு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக பல்வேறு பரிமாணத்தில் தனது செயற்பாடுகளை ஆயுதப் போராட்ட காலத்தில் முன்னெடுத்திருந்நது. 
1987ம் ஆண்டு அமுலாக்கப்பட்ட  இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரோஸ் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பி, 1989ல் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு  வடக்கு கிழக்கில் 13 ஆசனங்களை வெற்றி கொண்டது. இதைனைத் தொடர்ந்து ஈரோசின் அரசியல் முன்னணியாக  ‘ஈழவர் ஜனநாயக முன்னணி’ எனும் அரசியல் கட்சி, கட்சியின் பொதுச் செயலாளராகவிருந்த திரு.வேலுப்பிள்ளை பாலகுமார் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க 1989ம் ஆண்டு தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, சிறீ லங்கா அரசுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக,  ஈரோசின் 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் 1990ம் ஆண்டு  தமது பதவிகளை இராஜினாமா செய்தபின்,   சிறீ லங்கா அரசிற்கும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற யுத்தம்  காரணமாக 2007 வரை ஜனநாயக ரீதியாக செயற்பட முடியாத நிலையில், தேர்தல்களில் பங்கு பற்ற முடியாத நிலைமை கட்சிக்கு ஏற்பட்டது.

   2007ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில்   கட்சி செயற்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்சியி;ன் கிழக்கு மாகாண  உறுப்பி;னர்களால்  கட்சி புனரமைக்கப்பட்டு ஜனநாயக ரீதியாக அரசியல்  நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய சூழ்;நிலை அங்கு உருவாக்கப்பட்டது.

2007ம் ஆண்டு தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பதிய யாப்பின்படி உருவாக்கப்பட்ட, நிறை வேற்று அதிகாரம்  கொண்ட செயலாளர் நாயகம் எனும் பதவிக்கு   நியமிக்கப்பட்ட  அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.இராஜநாதன் பிரபாகரன் என்பவர் அதிகார துஸ்பிரயோகம், ஊழல், ஏமாற்றுதல்  மற்றும் நிதிமோசடி என்பவற்றில் ஈடுபட்டதாலும், அவரது தலைமைத்துவத்தின் கீழ் 2007ம் ஆண்டிலிருந்து 2015 பொதுத் தேர்தல்வரை  நடைபெற்ற  எந்தவொரு தேர்தல்களிலும் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட பிரதிநிதி எவரும் வெற்றி பெறமுடியாத பின்னடைவு கட்சிக்கு ஏற்பட்டதாலும்,  2015 ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பினனர்; வடக்கு, கிழக்கு, மலையகத்தைச சேர்ந்த கட்சி  உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய  கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான எந்திரி ஏ.ஆர். அருட்பிரகாசம்(லங்காராணி அருளர்) அவர்களின் தலைமையில் கட்சியின்  புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டது.

  2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற இது சம்பந்தமான மறுசீரமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரு.இராஜநாதன் பிரபாகரன் அவர்கள் கட்சியின் மறுசீரமைப்பிற்கு சம்மதம் தெரிவித்ததுடன், தனது நிறைவற்று அதிகாரங்களை மாவட்ட மட்டத்தில் பரவலாக்கவும், நிதி தொடர்பாகவும், கட்சியி;ன் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாகவும் மத்திய குழுவின் தீர்மானத்திற்கமைவாக செயற்படுவதாகவும் வாக்குறுதி அளித்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமையால், 21.02.2016 இல் மட்டக்களப்பில் இடம்பெற்ற மறுசீரமைப்பு மகாநாட்டில் மீண்டும் திரு.இராஜநாதன் பிரபாகரன்  என்பவரே செயலாளர்  நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை போன்று கட்சிக்கட்டுப்பாடுகளை மீறி, தான்தோன்றித்தனமாக அவர் செயற்பட்டதால், 22.07.2017 அன்று கட்சியின் மத்திய   குழு வவுனியாவில் கூடி, திரு.இராஜநாதன் பிரபாகரன் என்பவரையும்,   இவருடன் இணைந்து நிதி மோசடிகளில் ஈடுபட்டாரென குற்றம் சாட்டப்பட்ட கட்சியின் பொருளாளரான திரு.சுப்பிரமணியம் சிவானந்தராசா என்பவரையும் அவர்களது பதவிகளிலிருந்தும், கட்சி உறுப்பினர் உரிமையிலிருந்தும் இடைநிறுத்தியதுடன்,  கட்சியின் இளைஞர் அணித் தலைவராகவும், நிர்வாகச் செயலாளராகவும் இருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த திரு.ஆறுமுகம் ஜெயக்குமாhர் என்பவரை இடைக்கால செயலாளர் நாயகமாக நியமித்து  கட்சி சம்பந்தமான சகல ஆவணங்களையும்  அவரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.  ஆவணங்கள் எதுவும் குறிப்பிட்ட இருவராலும் ஒப்படைக்கப்படாமையால,; 1989ம் ஆண்டிலிருந்து கட்சி தொடர்பாக தேர்தல் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் பிரதிகள் அனைத்தும் தேர்தல் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டு கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 
  இதன் தொடர்ச்சியாக 27.07.2017 அன்று ஈரோஸ் அமைப்பில் இணைந்து விடுதலைக்காக இன்னுயிரீந்த தோழர்களின் நினைவாக, கனகராயன் குளத்தில்  ஏ9 பாதையோரத்தில்  அமைந்துள்ள ஈரோஸ் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட மரநாட்டு விழாவின் பின்னர் இடம் பெற்ற 2017ம் ஆண்டிற்கான பொதுக்குழுக்கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பட்டதுடன், திரு.இராஜநாதன் பிரபாகரன் என்பவரையும், திரு.சி.சிவானந்தராசா என்பவரையும் கட்கியிலிருந்து நீக்குவதென்ற முடிவு ஏகமனதாக அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
  இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு புதிதாக தெரிவு செய்யப்பட்ட பொதுச்செயளாளரான திரு.ஏ.ஈ.இராசநாயகம் என்பவரின் பெயரை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது, முன்னைய செயலாளர் நாயகமாகவிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட திரு.இராஜநாதன் பிரபாகரன் என்பவர் புதிய நிர்வாகக் குழுவிற்கெதிராக தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததால், 19.09.2017 அன்று தேர்தல் ஆணைக்குழு முன்பாக  இரு பிரிவினரும் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு எதுவிதமான சமரசத் தீர்வும் எட்டாமையால் இது தொடர்பான தமது இறுதி; முடிவை விரைவில் அறிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரால் தெரிவிக்கப்பட்டது. 
  தொடர்ந்து 01.11.2017 திகதியிடப்பட்டு   தேர்தல் ஆணையாளரால் இருபிரிவினருக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின்படி, கட்சி தொடர்பாக இருபிரிவினருக்கும் இடையிலான பிணக்கிற்கு நீதிமன்ற நடவடிக்கை மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தீர்வு கிடைக்கும்வரை ஈழவர் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு காணப்படும் கட்சியாக கருதப்படுவதறகு தேர்தல் ஆணையம் தீர்மானித்திருப்பதாக அறிவிக்கப்பட்ட்து.  இதே வேளையில் 24.10.2017 அன்று திரு.இராஜநாதன் பிரபாகரன் என்பவருக்கு, கட்சியின் யாப்பின்படி செயலாளர் நாயகமென உரிமைகோருவதற்கு எவ்வித அருகதையும் இல்லையெனவும், கட்சி தொடர்பான சகல நடவடிக்கைகளையும் நிறுத்துமாறும் கோரி சட்டத்தரணி மூலம் அறிவித்தல் அனுப்பப்பட்டது. 

அதனை மறுத்து திரு.இ.பிரபாகரன் என்பவர் எமக்கு பதில் அனுப்பியுள்ளதால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 03.12.2017 இல் மீண்டும் இரு பிரிவினரையும் அழைத்து கலந்துரையாடிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் திரு.மகிந்த தேசப்பிரிய அவர்கள் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை கட்சியின் சின்னமான ஏர் சின்னத்தில் எந்தப் பிரிவினரும் தேர்தல் கேட்க முடியாது என தீர்மானம் எடுத்துள்ளார். 

இந்நிலமையில் வரவிருக்கும் உள்ளுராட்சி தேர்தலில் பங்குபற்றுதல் தொடர்பாக கட்சியின் மத்திய குழு மட்டத்தில் கலந்துரையாடி உதயசூரியன் சின்னத்தில் இணைந்துள்ள கட்சிகளுடன் கூட்டமைத்து தேர்தலில் போட்டியிடுவதென 08.12.2017 இல் புரிந்துணர்வு ஒப்பத்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவ்வேளையில் திரு.இராஜநாதன் பிரபாகரன் என்பவரின் தலைமையில் நம்பிக்கையிழந்து கட்சியின் செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்பவர்களையும், அதனால் “ஈரோஸ் ஜனநாயக முன்னணி” எனும் புதிய கட்சியொன்றை பதிவு செய்ய கடந்த காலத்தில் முற்பட்ட கிழக்கு மாகாண ஈரோஸ் உறுப்பினர்களையும் “ஈழவர் ஜனநாயக முன்னணி” யின் புதிய நிர்வாகத்துடன் இணைந்து  தேரழர் வேலுப்பிள்ளை பாலகுமார் அவர்களின் வழியில் கட்சியைப்  பலப்படுத்தி தேர்தலில் பங்குபற்ற முன்வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். 

 தகவல்:
அ.எ.இராசநாயகம்                                                 
பொதுச் செயலாளர்,                                                        
ஈழவர் ஜனநாயக முன்னணி,                                                
ஈரோஸ் அலுவலகம்,                                            


பூந்தோட்டம்,        வவுனியா.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com