அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய மாநாடு பிரதம அமைச்சர் மற்றும் அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும்
குழுவின் தவிசாளர், கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2017 ஜூன் மாதம் 28ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இந்த மாநாடு நாடளாவிய ரீதியில் ஆலோசனை தலைவர்கள், உயர் அரச அதிகாரிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பங்குதாரர்களை ஒர் இடத்திற்கு கொண்டு வருவதற்கும், அரசியலமைப்பு மறுசீரமைப்புகளின் இயல்பு, பரிணாமம் மற்றும் முன்னோக்கிச் செல்லல் சம்பந்தமாக விழிப்புணர்வூட்டுவதற்குமானதோர் முயற்சியாகும்.
அரசியலமைப்புச் சபையின் பிரதித் தவிசாளர் கௌரவ திலங்க சுமதிபால அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, பிரதம அமைச்சர் மற்றும் அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் தவிசாளர், கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் மற்றும் தென் ஆபிரிக்காவின் முன்னாள் பிரதி நீதியரசர் அத்வகாத் டிகன்க் மொசெனெகெ அவர்களினால் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
கௌரவ மகா சங்கரத்னய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற மற்றும் அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள், மாகாண சபைகளின் கௌரவ ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்நிகழ்விற்கு சமுகமளித்திருந்தனர்.
Wow, this article is good, my sister is analyzing such things, so I am going to inform her. paypal login
ReplyDelete