1 தொடக்கம் 31 வரை! ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் !!


ஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட
இருக்கின்றன. இராசியை வைத்து ஜோதிடம் பார்ப்பது போல பிறந்த தேதியை வைத்தும் பார்க்கும் வழக்கம் இருக்கிறது.சிலர் இயற்கையாகவே ஆளுமை திறன் கொண்டிருப்பார்கள், சிலர் உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பார், உங்கள் குணாதிசயங்கள் என்னென்ன என்று இனிக் காணலாம்…
1
பெரிய குறிக்கோள்களை துரத்தி செல்லும் தலைமை பண்புள்ள நபர், சுயமாக, சுதந்திரமாக வேலை செய்ய விரும்பும் நபர், ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கை உங்களை விரைவாக அலுத்துப் போக வைத்துவிடும். எந்த வேலையையும் முதலில் தொடங்க முனையும் பழக்கம் இருக்கும், மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பு இருக்கும். மற்றவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ளும் குணம் இருப்பினும், பிடிவாதமும் இருக்கும். எதையும் வேகமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கோபம் அதிகமாக வரும்.
2
உணர்ச்சிப்பூர்வமாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் செயல்படும் நபர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று உற்று கருதும் நபர்கள், அமைதியான நிலை இருக்க வேண்டும் என்பதற்காக ஒத்துழைத்து போகும் பழக்கம் இருக்கும். தந்திரங்களும் செய்ய தெரிந்தவர்கள். அன்புக்குரிய நபர்களுடன் மிகவும் இணக்கமாக பழகுபவர்கள். குழந்தைத்தனம் அதிகமாக இருக்கும். எதுவாக இருப்பினும் உன்னித்து முழுமையாக அறியும் மனோபாவம் இருக்கும்.
3
படைப்பு திறன் அதிகமாக இருக்கும். ஈரநெஞ்சம் கொண்டவர்கள், எழுதுவதில் திறன் அதிகமாக இருக்கும். தொழில் ரீதியாக இல்லை எனிலும் ஹாபி என்ற பெயரிலாவது உங்கள் படைப்பு திறனை பின்தொடர்ந்து செய்வீர்கள். கற்பனை திறன் அதிகம். அனைவரையும் உற்சாக படுத்துவீர்கள், உங்கள் மனநிலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டீர்கள். நிலைத்து நிற்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.
4
கடினமாக உழைப்பவர்கள், மனசாட்சிக்கு கட்டுப்படுபவர்கள், தங்களுக்கான சுயக் கட்டுபாடுகள் வரையறுத்து அதற்கு பொறுப்பேற்று வாழ்பவர்கள். குடும்பத்தின் மீது பாசமும் அக்கறையும் அதிகமாக இருக்கும். அதிகமாக உணர்ச்சிவசப்படமாட்டீர்கள். வாழ்க்கை, தொழில், உறவுகள் என அனைத்திற்கும் சரியான அளவு நேரத்தை ஒதுக்கி வாழ்பவர்கள். உடன் பணிபுரியும் நபருடன் நல்ல முறையில் வேலை செய்யும் குணாதிசயங்கள் இருக்கும்.
5
சாகசங்கள், நீண்ட பயணங்கள் போன்றவற்றை அதிகம் விரும்பும் நபர்கள். எப்போதுமே ஓர் உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என எண்ணுவீர்கள். திறமைகள் நிறைய இருக்கும், எழுத்து, மக்களுடன் தொடர்புக் கொள்வது போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள். ஓர் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது உங்களை பொறுத்தவரை மிகவும் கடினம். மிக விரைவாக ஓர் விஷயத்தின் மீது அலுப்பு ஏற்பட்டுவிடும். சுய ஒழுக்கும் சற்று குறைவாக இருக்கும்.
6
குடும்பப்பாங்கான நபர், மக்களை திருப்திகரமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். சொந்த வாழ்க்கை மற்றும் வேலையை சமநிலையாக எடுத்து செல்வீர்கள். எந்த விதமான உணர்வாக இருந்தாலும் அதை சரியாக கையாளும் நபர், தன் எல்லை அறிந்து செயல்படும் நபர். உறவுகள் மீது அதிக கவனம் இருக்கும். மற்றவர்களுக்கு உதவும் குணாதிசயம், சுயநலம் இன்றி வாழ்பவர்.
7
பெரிய மூளைக்காரர், எதையும் ஆராய்ந்து பார்க்க மனம் அலைபாயும். மனது சொல்வதை கேட்டு நடப்பவர், உணர்வு ரீதியாக யாரேனும் நெருங்க நினைத்தால் பெரிதாக நம்பமாட்டீர்கள், பொறுப்பற்ற முறையை நீங்கள் கைவிட வேண்டும், இல்லையேல் உங்களையே அது ஒருநாள் பாதிக்கும்
8
தொழில் ரீதியான திறமை அதிகம். தைரியமாக தொழில் இறங்க முனைவார்கள். கசப்பான அனுபங்கள், தோல்வி போன்றவற்றை எதிர்க்கொள்ள தயங்கமாட்டீர்கள். தலைமை வகிக்கும் தன்மை உங்களது பலம். தன்னம்பிக்கை, சுயமரியாதை, போன்றவை உங்களது நல்ல குணங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் நீங்கள் விடாமுயற்சியை கைவிடக் கூடாது.
9
தொலைநோக்குப் பார்வை, புதிய சிந்தனைகள், படிப்பாற்றல் போன்றவை உங்களது பலம். உங்களது சிறந்த வேலை எதுவென நீங்களாக தேர்வு செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் தன்மை அதிகம். எதையும் பெரியளவில் செய்ய வேண்டும் என நினைப்பீர்கள்.
10
பெரும் இலட்சியங்கள் இருக்கும், சுதந்திரம் எதிர்பார்ப்பீர்கள். வெற்றியை அடைய உங்கள் தலைமை குணம் உதவும். ஆளுமை திறன் உங்களிடம் சிறப்பாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்வதில் நீங்கள் கில்லாடி.
11
சிந்தனைகளும், உள்ளுணர்வும் உங்களிடம் சிறந்து இருக்கும் குணங்கள். மற்றவர்களுக்கும் நல்லது, தீயது பற்றி எடுத்துரைக்கும் குணநலம் உங்களிடம் இருக்கும். எளிதாக ஒருவரை விமர்சனம் செய்துவிடுவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் நபராக திகழ்வீர்கள்.
12
கேளிக்கை விரும்பும் நபர், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் நபர், எழுத்தில் அதிக திறமை உள்ளவர், சூழ்நிலைகளை சிறந்த முறையில் கையாளும் நபரும் கூட. நட்பு ரீதியாக சிறந்து பழகும் நபராக நீங்கள் இருப்பீர்கள்.
13
கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், சமூகம் மீது பற்று அதிகமாக இருக்கும். மிகவும் ஆழமாக அன்பு செலுத்துவீர்கள். இயற்கையை விரும்பும் நபர், ஓர் விஷயத்தில் கவனமாக செயல்படும் பண்பு உங்களிடம் இருக்கும்.
14
ஒரு விஷயத்தின் மீதான விருப்பம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். விரைவாக அலுப்பு ஏற்படும், இடத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். ஊரோடு சேர்ந்து வாழ்வது, பழகுவது போன்றவை உங்களுக்கு பிடித்தவை. எளிதாக சோர்வடைந்து விடுவீர்கள். வாழ்க்கையில் சில முடிவுகளை நீங்கள் ஆராய்ந்து எடுக்க வேண்டும்.
15
என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை விட, அதை எப்படி செய்கிறீர்கள் என்பது உங்கள் சிறப்பு. கலை திறமைகள் அதிகம் இருக்கும். உறவுகளில் தீர்கமான முடிவுகளை எடுப்பீர்கள். சிறந்த துணையை தேடுவீர்கள். பெரும்பாலும் உங்கள் அன்பு, பாசம், காதல் எல்லாம் உங்கள் குடும்பத்தின் மீது தான் இருக்கும்.
16
ஆன்மிகம் மற்றும் தத்துவ ரீதியான நம்பிக்கை உடையவர்கள். பார்க்காத உலகை புரிந்துக் கொள்ள, பயணிக்க விரும்புவார்கள். எதையும் செயல்முறையில் அறிந்துக் கொள்ள முயற்சிப்பார்கள், அதை மற்றவருடன் பகிர்ந்துக்கொள்ள முனைவார்கள்.
17
பெரும் இலட்சியங்களை கொண்டிருப்பீர்கள், பொருளாதாரம் மற்றும் தொழில் சிறந்து விளங்குவீர்கள். படைப்பு திறன் மற்றும் தைரியம் அதிகம் இருக்கும். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள், பெரிய திட்டங்களை எடுத்து வேலை செய்ய அதிகமாக ஈடுபடுவீர்கள்.
18
பிறப்பிலேயே ஆளுமை திறன் கொண்டவர்கள் நீங்கள். அரசியல், மதம், கலை, போன்றவற்றில் உங்கள் திறமை மேலோங்கி இருக்கும். மக்களை புரிந்துக் கொள்வதில் நீங்கள் சிறந்தவர்.
19
சுதந்திரமாக செயல்படும் திறன் கொண்டிருப்பீர்கள், வெற்றிபெற எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து முன்னேறி செல்லும் துணிவு இருக்கும். உங்கள் இதயத்தை முன்னோடியாக கொண்டு பயணம் செய்பவர் நீங்கள்.
20
உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பினும், எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். விழிப்புணர்வு அதிகம் இருக்கும், உங்கள் உள்மனதின் எண்ணங்களை மறைத்து வைத்துக் கொள்வீர்கள், வெளிக்காட்ட மாட்டீர்கள். அழகு, காதல், நல்லிணக்கம் போன்றவற்றை பின்தொடர்ந்து நடக்கும் நபராக இருப்பீர்கள்.
21
பளிச்சிடும் பேச்சு தான் உங்கள் வெற்றியின் இரகசியம். சுட்டித்தனம் உங்கள் காலடியிலேயே இருக்கும். எழுத்து மற்றும் பேச்சாற்றல் கொண்டவர். சவால்களை எதிர்கொள்ளும் நபர், சில சமயங்களில் உங்களது பதட்டம் உங்களது திறமையின் வெளிப்பாட்டை குறைத்து விடும்.
22
ஒரு தொழிலை தொடங்கி அதை வளர்த்து செல்வதில் சிறந்து திகழ்வீர்கள், தலைமை பண்பு, திட்டமிடுதல் போன்றவை உங்களது பலம். அசாதாரண எண்ணங்கள் கொண்டிருப்பீர்கள். செயல்முறை மற்றும் சிந்தனைகள் குறித்த இரண்டு வகையான செயல்பாடுகளிலும் ஈடுபடுவீர்கள். மனிதநேயம் கொண்ட நபராக இருப்பீர்கள்.
23
எதையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமானது என்று எண்ணுபவர் நீங்கள், ஏமாற்ற பிடிக்காது, உறவுகளில் சீக்கிரம் ஒட்டிக்கொள்ளும் குணமுடையவர், கூர்மையான புத்திக் கொண்டவர், புரிதலும் அப்படி தான்.
24
குடும்பம் சார்ந்து வாழ்பவர், உறவுகளுக்கு சமநிலை அளித்து திகழ்வீர்கள். உணர்ச்சி ரீதியாக காதலை ஆளுமை செய்வீர்கள். உணர்ச்சிப்பூர்வமாக உங்கள் பிரச்சனைகளை பெரிதாக்கிவிடுவீர்கள். சோகத்தில் இருக்கும் போது யாரேனும் தோள் கொடுக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும்.
25
அறிவு சார்ந்து வாழ்க்கையை நடத்தும் நபர். அதே சமயம் உள்ளுணர்வுகளுக்கும் மதிப்பளிப்பீர்கள். எதையும் ஆழமாக ஆராய்ந்து செயல்படும் நபராக இருப்பீர்கள். உங்களது ஆராயும் குணம் தான் எதையும் எதிர்கொள்ள உங்களை தயார்ப்படுத்தும்.
26
திறமையை வைத்து தொழில் ரீதியாக பணம் பார்க்கும் குணம் கொண்டவர். சிறந்த ஆளுமை குணம் கொண்டவர். தந்திரமாகவும், சாமார்த்தியமாகவும் காய்களை நகர்த்தும் நபர். தான் செய்யும் எந்த செயலுக்கும் ஓர் பரிசு அல்லது ஊக்கம் எதிர்பார்க்கும் நபர்.
27
மற்றவரை எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். தொலைநோக்கு பார்வை கொண்டவர், பல துறை சார்ந்து ஆழ்ந்த ஞானம் கொண்டவர், மக்களை புரிந்துக் கொள்ள நீங்கள் கொஞ்சம் முதிர்ச்சி அடைய வேண்டும். அவசரப்படக் கூடாது.
28
தலைமை குணம் உங்களுக்கு கிடைத்த பரிசு. அனைவருடன் ஒத்துழைத்து வேலை செய்யும் குணம் இருக்கும். லட்சிய வெறி இருக்கும், எதையும் ஆராய்ந்து தான் செய்வீர்கள், சிறந்த முறையில் திட்டமிடுவீர்கள். எதையும் துணிந்து செய்ய ஆர்வம் காட்டுவீர்கள்.
29
படைப்பாற்றலும், உள்ளுணர்வும் அதிகம். உங்கள் மனம் எதையும் காட்சிப்படுத்தி தான் செயல்படும். உடல்நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மக்களுக்கு நல்ல ஊக்கமளிக்கும் நபராக இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல், உங்களை பலர் பாராட்டுவார்கள்.
30
கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் எழுச்சியூட்டும், அழகான மற்றும் கவர்ந்திழுக்கும் நபராக இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் நபர்களோடு எளிதாக ஒட்டி உறவாட ஆரம்பித்துவிடுவீர்கள்.
31
குடும்பத்தின் மீது பாசத்தை பொழியும் நபராக இருப்பீர்கள், ஒரு வேலையை ஒப்புக்கொண்டுவிட்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். இயற்கையை விரும்பும் நபர், நீங்கள் கடினமாக, நீண்ட நேரம் உழைக்கும் திறன் கொண்டவர். உங்கள் மீது நீங்கள் முதலில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com