ஜனாதிபதிகௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (07) முற்பகல் சமுத்திரம் மாசடைதலைத் தடுப்பதற்கான அதிகார சபையில் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் நிறுவனத்தின் நடவடிக்கைகள் பற்றிக் கண்டறிவதற்காக ஜனாதிபதி அவர்கள் இக் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதி அவர்கள் இதன் போது பணிக்குழாத்தினருடன் சினேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
சமுத்திரம் மாசடைதலைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் சமுத்திரம் மாசடைவதைத் தடுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றை மேற்கொள்ளும் முழுப் பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக சமுத்திரம் மாசடைதலைத் தடுப்பதற்கான அதிகாரசபை தாபிக்கப்பட்டுள்ளது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
0 comments:
Post a Comment