வடக்குமாகாண சுகாதாரசுதேச மருத்துவ அமைச்சினால் கிளிநொச்சி கல்மடு நகரில் மூலிகைத்தோட்டபயிர்ச்செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாண சுதேசமருத்துவ திணைக்களத்தின் மாகாணஆணையாளர் திருமதி.சி.துரைரட்னம் தலைமையில் (08.06.2016) நடைபெற்றநிகழ்வில் நாற்பதுக்கு மேற்பட்டபயிர்ச் செய்கையாளர்கள் கலந்துகொண்டனர்.கிளிநொச்சிமாவட்டத்தில் வாழுகின்ற பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தைமேம்படுத்தம் நோக்கலும்,உள்ளுரில் மூலிகைசெடிகளைஉற்பத்திசெய்யும் நோக்கிலும் இந்தசெயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்குமாகாணசுகாதார அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் சுதேசமருத்துவதுறையை மேம்படுத்தும் நோக்கில் கல்மடுநகரில் 100 ஏக்கர் காணி மூலிகைத்தோட்டம் அமைப்பதற்குஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் 75 ஏக்கர் வரையானகாணியில் மூலிகைசெடிவளர்ப்பும் 25 ஏக்கரில் மூலிகைபதப்படுத்தும் தொழிற்சாலைஅமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தென்னிந்தியசித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள் அண்மையில் வடக்குக்குவிஜயம் செய்தமைகுறிப்பிடத்தக்கது.
ஏதிர்காலத்தில் வடக்குமாகாணத்தின் மூலிகைநகராககிளிநொச்சிகல்மடுநகர் விளங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment