வெளிநாட்டு கடன் சுமையினை நாடு எதிர்நோக்கியுள்ள சவால் மிகுந்த இவ்வேளையில் அனைத்து கருத்து முரண்பாடுகளையும் மறந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு அறிவு, நுண்ணறிவு மற்றும் வழிகாட்டலை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் சட்டத்தரணிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சட்டத்தரணிகள் சிலருக்கும் இடையே நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை வழியுறுத்தினார்.
புதிய அரசு பதவியேற்று ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் அதுவரை நாடு இழந்திருந்த பல்வேறு வெற்றிகளை பெற்றுக்கொள்வதற்கு முடிந்ததாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது நினைவுகூர்ந்தார்.
நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை கண்கூடாக பார்க்க முடியாதபோதும் சர்வதேச ரீதியில் பெரு வரவேற்பை பெற்றுக்கொள்ள முடிந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், கருத்துக்களையும் மற்றும் விமர்சனங்களையும் தெரிவிக்கின்ற எந்தவொரு நபருக்கும் செவிசாய்க்கும் நபர் என்ற ரீதியில் அனைவரதும் ஒத்துழைப்பை பெற்று நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது அவாவாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டில் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை உறுதி செய்து ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் பயணத்திற்கு சட்ட வல்லுனர்களான தாம், தம்மாலான உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்கள்.
இச் சிநேகபூர்வ சந்திப்பின்போது சட்டத்தரணிகள் பலருடன் நிமல் சிறிபால த சில்வா, சுசில் பிரேம ஜயந்த, பைசர் முஸ்தபா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகிய அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment