கிளிநொச்சி முரசுமோட்டை ஐயன்கோவிலடிக் கிராமத்திற்கான பிரதான வீதி ஆபத்தான நிலையில் காணப்படும் மரப்பாலத்தனை புனரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முரசுமோட்டை கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட ஐயன்கோவிலடிக்கிராமத்தில் 25 வரையான வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வீதியாகவும் முரசுமோட்டை ஊரியான் உள்ளிட்ட கிராமங்களுக்கான பொது மயானத்திற்குச் செல்லும் வீதியாகவும் காணப்படும் இவ்வீதி புனரமைக்கப்படாமல் காணப்படுவதுடன் குறித்த வீதியில் உள்ள பாலமும் மிக ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
இப்பாலத்தினைப் புனரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment