வவுனியா பொது வைத்தியசாலையில் மே 31 தொடக்கம் ஜீன் 4ஆம் திகதிவரை ஜந்து நாட்கள் கண் வில்லை மாற்று சத்திரசிகிச்சை முகாம் இடம்பெற்று வருகின்றது. இதில் வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மதவாச்சி போன்ற பிரதேசங்களிலிருந்து ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கான கண் வில்லை மாற்று சத்திரசிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றது.
இக் கண் சத்திரசிகிச்சை ஏற்பாட்டாளராக புனர்வாழ்வும் புதுவாழ்வும் பிரித்தானியா, விஷன் 2020 இலங்கை, விஷன் மிஷன் சிங்கப்பூர், றோட்டரிகழகம் முல்லைத்தீவு போன்றவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஏராளமான பொது மக்கள் வந்து செவையினை பெற்றுச் செல்கின்றனர். அத்துடன் வெளிநாட்டு கண் வில்லை சத்திரசிகிச்சை நிபுணர்கள் இருவர் அத்துடன் இலங்கை நிபுணர்கள் என இணைந்து கண் சத்திரசிகிச்சை முகாமில் சிகிச்சை வழங்கிவருகின்றனர். குறித்த ஜந்து நாட்களில் 500 பேருக்கு கண் சத்திர சிகிச்சையினை செய்து மடிக்கப்பட்டால் இலங்கையில் இடம்பெற்ற கண் சத்திர சிகிச்சை முகாமில் முதல் தடவையாக இடம்பெறும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment