வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் கே.டி. கசுன் விஜயசுந்திர வயது 35 பொகஸ்வௌ பகுதியிலுள்ள சமுர்த்தி வங்கியில் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார்
கடந்த வாரம் சமுர்த்திக் கொடுப்பனவுகள், வாழ்வாதரா உதவிகள் வறுமைக்கோட்டிலிருக்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு நின்ற சிலர் தமக்கு வழங்கப்படவில்லை. அதற்கான காரணத்தை குறித்த உத்தியோகத்தரிடம் கேட்டுள்ளனர்.
வறுமைக்கோட்டிலுள்ள, கணவனை இழந்த, விஷேட தேவைக்குட்பட்டவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த உத்தியோகத்தர் தொவித்துள்ளார்.
இவ்விடயத்தை ஏற்றுக்கொள் மறுத்தவர்கள் தமக்கும் வழங்கப்படவேண்டும் என்று தெரிவித்து தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமுர்த்தி உத்தியோகத்தர் இவ்விடயம் தொடர்பாக வவுனியா தெற்கு பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
தனது பணியினை நிறைவு செய்துவிட்டு வவுனியா காரியாலயத்திற்குச் சென்று கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பொகஸ்வ, பேகரதன்ன பகுதியில் ஆறு பேர் கொண்ட குழுவினர் சமுர்த்தி உத்தியோகத்தரை வழிமறித்து தாக்கியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் தலைக்கவசத்தினாலும் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் நாடிப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 6 தையல் போடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டபோது கடந்த சில நாட்களாக கொழும்பில் கூட்டத் தொடர் ஒன்றில் கலந்து கொண்டிருப்பதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா வந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment