வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள், குப்பைகள், பொலித்தீன் பைகள் போன்றவற்றை; வர்த்தக நிலையத்திற்கு முன்பாக வைத்தால் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதாக வவுனியா வர்த்தக சங்கம் துண்டுப்பிரசுரத்தின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
அப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையபொறுப்பதிகாரியின் வேண்டுகோளின்படி இவ்வறிவித்தல் விடுக்கப்படுகின்றது.
வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், கழிவுப் பொருட்களை கூடையில் அல்லது பைகளில் போட்டு வைத்து நகரசபையின் குப்பை அகற்றும் வாகனம் வரும்போது அவர்களிடம் கையில் எடுத்துக் கொடுக்கவும். குறிப்பாக இரவு நேரங்களில் கடைக்கு வெளியே குப்பைகள், கூடைகள், பைகள் என்பன வைக்க வேண்டாம்.
மேலும் வர்த்தக நிலையங்களிலிருந்து வெளியேறும் பொலித்தீன் கழிவுகளை எக்காரணம் கொண்டும் வியாபார நிலையத்திற்கு முன்னால் போடவேண்டாம். இவ்வேண்டுகோளிற்கு வர்த்தக நிலையத்தினர் ஒத்துழைப்பு வழங்கி நகரை சுத்தமாக வைத்திருந்து சுகாதாரத்தை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்வதுடன் இவ் அறிவித்தலை கருத்திற் கொள்ளாது செயற்படும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார். என்று மேலும் அத் துண்டப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment