தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் அதிகம் அணிவது ஜீன்ஸைத் தான். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி ஜீன்ஸைத் துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஒரு ஜீன்ஸ் இருந்தால், அதைக் கொண்டு பல டி-சர்ட்டுகள் அணியலாம்.
ஆனால் ஜீன்ஸை சரியான முறையில் துவைத்து பராமரித்து வந்தால், உங்களது ஜீன்ஸ் பல மாதங்கள் ஏன் ஒரு வருடம் கூட புதிது போன்று மின்னும். அதிலும் தற்போது கோடைக்காலம் என்பதால், துவைக்கும் துணி வேகமாக உலர்ந்து விடும் என ஜீன்ஸை அடிக்கடி துவைப்பார்கள்.
சரி, ஜீன்ஸ் புதிது போல் இருக்க எவ்வாறு துவைக்க வேண்டும் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஜீன்ஸ் பேண்ட் புதிது போன்று மின்னுவதற்கு துவைக்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகளை கீழே கொடுத்துள்ளது.
வாஷிங் டிப்ஸ்
உங்கள் ஜீன்ஸ் வெளுத்துப் போகாமல் இருக்க வேண்டுமானால், ஜீன்ஸைத் துவைக்கும் போது உட்பகுதியை வெளியே எடுத்துப் போட்டுத் துவைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் சாயம் போகாமல் புதிது போன்று நீண்ட நாட்கள் இருக்கும்.
வடிவம் மாறாமல் இருக்க
பெரும்பாலும் ஜீன்ஸைத் துவைக்கும் போது, சில நேரங்களில் வடிவம் மாறி, தரம் குறைய ஆரம்பிக்கும். இதனைத் தடுக்க, ஜீன்ஸைத் துவைக்கும் போது அதன் பட்டன் மற்றும் ஜிப் போட்டுக் கொண்டு துவைக்க வேண்டும்.
பாக்கெட்டுகளை சரிபார்க்கவும்
ஜீன்ஸைத் துவைக்கும் போது, அதன் பாக்கெட்டை ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஜீன்ஸ் பாக்கெட்டி ஏதேனும் காகிதம் இருந்து, அதை அப்படியே துவைத்தால், அந்த காகிதம் கரைந்து, ஜீன்ஸின் தரத்தை பாதிக்கும்.
ப்ளீச் வேண்டாம்
ஜீன்ஸின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமெனில் ப்ளீச் செய்ய வேண்டாம். ப்ளீச்சிங் செய்தால், ஜீன்ஸின் நூலிழை பாதிக்கப்பட்டு, விரைவில் ஜீன்ஸ் பழையது போன்று காணப்படும்.
சூரியக்கதிர்கள்
எப்போதும் ஜீன்ஸைத் துவைத்த பின், அதனை வெயிலில் உலர்த்தும் போது, சூரியக்கதிர்கள் நேரடியாக ஜீன்ஸின் வெளிப்புறம் படாதவாறு, ஜீன்ஸை திருப்பிப் போட்டு உலர்த்துங்கள். இல்லையெனில் சூரியக்கதிர்களால் ஜீன்ஸின் நூலிழை பாதிக்கப்பட்டு, வெளுத்துப் போக ஆரம்பிக்கும்.
0 comments:
Post a Comment