அகில இலங்கை போதைப்பொருளுக்கு எதிரான இளைஞர் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் அவர்களின் 74வது பிறந்த தின நினைவு நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (21) பிற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் தேசியப் பணியை நிறைவேற்றிவரும் நபர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டதுடன், சங்கைக்குரிய குப்பியாவத்த போதானந்த தேரர், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் திருமதி சந்திரா ஹேமசந்திர ஆகியோருக்கும் ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.
அகில இலங்கை போதைப்பொருளுக்கு எதிரான இளைஞர் அமைப்பின் மூன்று வருட தொலைநோக்கை சமூகமயப்படுத்தும் 'அமத்யப ஹண்ட' நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் தலைவர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தலைமை தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக குமாரதுங்க, அமைச்சர்களான ரவீ கருணாநாயக, அர்ஜுன ரணதுங்க, முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment