வவுனியாவில் பல முதிரைக் குற்றிகளை வாகனத்தில் கடத்திச் செல்ல முற்பட்டபோது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வாகத்துடன் முதிரைக் குற்றிகளை மடக்கிப்பிடித்து கடத்த்ல முயற்சியினை தடுக்கப்பட்டுள்ளது
வவுனியா வன பரிபாலனத்திணைக்களத்திற்கு கிடைத்த ரகசியத்தகவல் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பெரியமடு பகுதியில் 13முதிரைக் குற்றிகளை ஏற்றிய கப் வாகனம் படங்கு மூலம் மூடிக்கட்டப்பட்ட நிலையிலிருந்த வாகனம் பெரியமடு பகுதியிலிருந்து பூந்தோட்டம் சென்றபோது அதிகாலை 5மணியளவில் பூந்தோட்டம் பகுதியில் வைத்து வன பரிபாலனத் திணைக்கள அதிகாரிகள் தலைமையில் சென்ற 4பேரடங்கிய குழுவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் வாகனத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக வவுனியா வன பரிபாலனத்திணைக்கள அதிகாரி சமன் பிரியந்த தெரிவித்துள்ளார். வாகனத்தில் உரிமையாளரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் விசாரணையின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும். கைப்பற்றப்பட்ட 13 முதிரைக்குற்றிகளின் பெறுமதி பல இலட்சம் ரூபா பெறுமதியானது என்று மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment