தலைநகர இளைஞர் கவிதைக் கழகத்தின் 81ஆவது ஆண்டுநிறைவு விழா மற்றும் விருதுவழங்கும் வைபவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் இன்று (22) பிற்பகல் மேல்மாகாண கலாலயத்தில் இடம்பெற்றது.
‘கவிபத்தி’, ‘நர்த்தனபத்தி’ ஞாபகார்த்த விருது உள்ளிட்ட கவிதை மேம்பாட்டுக்காக பாடுபட்ட நபர்களுக்கு இதன் போது ஜனாதிபதி அவர்கள் விருதுகள் வழங்கி வைத்தார்.
கொழும்பு ஆனந்தாக் கல்லூரி மாணவர் ஒருவரான சிதும் ஹேலித பெரேரா எழுதிய ‘மகே கவி சித்துவிலி’ (எனது கவிதைச் சிந்தனை) எனும் கவிதை நூல் இதன் போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
தலைநகர இளைஞர் கவிதைக் கழகத்தின் தலைவர் பொரலெஸ்கமுவ பிரனீத் பெரேராவினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
தலைநகர இளைஞர் கவிதைக் கழகம் 1935ஆம் ஆண்டு தோற்றம் பெற்றதுடன் அதன் முன்னோடிகளாக பிற்காலத்தில் கொழும்பு யுக கவிஞர்கள் வரிசையில் புகழ்பெற்றவர்களான பீ.பி.அல்விஸ் பெரேரா, வில்சன் ஹேகொட, ஆதர் எம்.த.அல்விஸ் மற்றும் கடவெத்தாவே பீடர் பெரேரா ஆகியோர் விளங்குகின்றனர்.
50ஆவது தசாப்தமளவில் தலைநகர இளைஞர் கவிதைக் கழகமானது சற்று ஓய்ந்திருந்ததுடன் எச்.எம்.குடலிகம எனும் கவிஞர் அதன் தலைவராக செயற்படத் துவங்கியதைத் தொடர்ந்து அது மீண்டும் புத்துயிர்பெற்றது.
1985 ல் தலைநகர இளைஞர் கவிதைக் கழகம் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் அரசு ஏற்றுக்கொண்டு அதனை புண்ணிய நிறுவனமாக மாற்றியதுடன் 81 ஆண்டுகளாக சிங்களக் கவிதைக்கு தலைநகர இளைஞர் கவிதைக் கழகம் பாரிய பங்காற்றியது.
மேல்மாகாண அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச, தலைநகர இளைஞர் கவிதைக் கழகத்தின் தலைவர் பொரலெஸ்கமுவ பிரனீத் பெரேரா, பிரதித் தலைவர் ஆசிரி விஜேசேகர ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்கள், கவிஞர்கள் மற்றும் கலை இரசிகர்கள் பலர் இவ் விழாவில் பங்கேற்றனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
0 comments:
Post a Comment