கணவன், மனைவி உறவில் மட்டுமே ஒருவரின் 100% உண்மை பக்கமும், செயல்பாடுகளும் கண்டறிய முடியும். நண்பர்களாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் கூட சில சுபாவத்தை, குணாதிசயங்களை நாம் அவர்களிடம் வெளிபடுத்த முடியாது. சற்று கூச்சம் அல்லது கேலி, கிண்டல் செய்வார்களோ என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால், கணவன், மனைவி உறவில் கூச்சம் என்ற வார்த்தைக்கே இடமில்லை, தேவையும் இல்லை. அதிலும், குறிப்பிட்ட சில விஷயங்களை அவர்களது தனிப்பட்ட அந்தரங்க இடமான படுக்கையறையில் அவர்கள் தான் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியும். மற்றும் கேலி, கிண்டலோ, மறுப்போ இருக்காது
.
செயல் 1
விசித்திரமான முக பாவங்கள்! கொஞ்சி குலாவும் போது அல்லது உறவில் ஈடுபடும் போது. சிலர் தங்கள் முக பாவங்களை விசித்திரமாக வெளிபடுதுவர்கள்.
செயல் 2
ஜோக்கு! சில ஜோக்குகளை படுக்கையறையில் மட்டும் தான் பகிர்ந்துக் கொள்ள முடியும். முக்கியாமாக சில 18+ ஜோக்குகள் கூட உறவில் ஈடுபடும் போது தம்பதிகள் பகிர்ந்துக் கொள்கின்றனர்.
செயல் 3
LOL, ROFL, இதை முகநூலில் அதிகம் பகிர்ந்து பார்த்திருப்பீர்கள். ஆனால், நண்பர்கள் கூட்டத்தில் கூட ஒரு அளவிற்கு மேல் வாய்விட்டு சிரிக்க முடியாது. நக்கல், கிண்டல் செய்வார்கள் என அடிக்கிக் கொள்வோம். ஆனால், படுக்கையறையில் அந்த கூச்சமே தேவையில்லை தாராளமாக வாய்விட்டு சத்தமாக சிரிக்கலாம்.
செயல் 4
அடுத்தது என்ன?! அடுத்து வாழ்க்கையில், வேலையில் என்ன செய்ய போகிறோம்? என சில சமயம் சிலர் தனியாக பேசும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இதை வேறு எங்கேனும் தெரியமால் செய்தாலும் பைத்தியம் போல பார்பார்கள். ஆனால்,படுக்கையறையில் துணை இருக்கும் போது கூச்சப்படாமல் என்ன வேண்டுமானாலும், பேசலாம்.
செயல் 5
டர்ர்ர், புர்ர்ர்ரர்!! வாயுத்தொல்லை என்பது அனைவருக்கும் உண்டாவது தான். ஆராய்ச்சியாளர்கள் இது ஆரோக்கியமாக இருப்பதன் அறிகுறி எனவும் கூறுகின்றனர். ஆனால், படுக்கையில் இதற்கெல்லாம் கூச்சப்பட தேவையில்லை!
செயல் 6
பாத்ரூம்! ஒரே நேரத்தில் இருவரும் பாத்ரூம் பயன்படுத்துவது. ஒருவர் குளிக்கும் போது, மற்றொருவர் பல் துலக்குவது. தம்பதிகளுக்குள் மட்டும் தான் இதை கூச்சமில்லாமல் செய்ய முடியும்.
செயல் 7
ஆடை! ஒருவர் ஆடையை மற்றொருவர் மாற்றி உடுத்திக் கொள்வது.
செயல் 8
வேலை! யாரேனும் ஒருவர் அலுவல் அல்லது முக்கியமான வேலை செய்துக் கொண்டிருக்கும் போது பாரபட்சம் இன்றி தொந்தரவு செய்வது.
0 comments:
Post a Comment