வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் 38ஆவது விளையாட்டு விழா நிகழ்வுகள் இன்று மாலை 2.30மணியளவில் புனித அந்தோனியார் ஆலய மைதானத்தில் பாலர் பாடசாலையின் இயக்குநர் அருட்பணி எஸ். சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா. உதயராஜா, சிறப்பு விருந்தினராக வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா, மற்றும் வவுனியா தனியார் வங்கியின் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் 38ஆவது விளையாட்டு நிகழ்வுகளாக முன்பள்ளியின் கீழ்ப்பிரிவு மாணவர்கள் பழம் பொறுக்குதல், பூப்பறித்தல், நிறம் தீட்டுதல், மாலைமாற்றுதல், மீன்பிடித்தல், போன்ற நிகழ்வகளும், முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு பந்து உருட்டுதல், கோபுரம் உடைத்தல், சாக்கு ஓட்டம், சங்கீத கதிரை, வினோத உடை போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன்.
0 comments:
Post a Comment