அண்மைக்காலமாக வவுனியா நகர சபையில் பல மர்ம நிகழ்வுகள் இடம்பெற்றுவருவது யாவரும் அறிந்ததே உலக உணவுத்திட்டத்தின் பொருட்கள் மாயமானமை. பின் அவை தொடர்பான ஆவணங்கள் எரியூட்டப்பட்டமை. முதற்கொண்டு இறுதியாக பணியாளர்களின் தனிநபர் கோவைகள் காணாமல் ஆக்கப்பட்டமை, சில ஆவணங்கள் குப்பையில் வீசப்பட்டிருந்தமை என சினிமா பாணியிலான பல மர்மங்கள் இடம்பெற்றுள்ளன .
இவைக்கு மேலதிகமாக நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட வவுனியா பொது நூலகத்தினுள் நேற்று மாலை நூலகம் மூடப்பட்ட பின்னர் நூலகத்தின் அறை ஒன்றினுள் மர்ம நபர் ஒருவர் இரவுமுழுவதும் தங்கியிருந்ததுடன் அறையினுள் பெண்களின் ஆடைகளும் வயதுவந்தவர்களுக்கான இறுவெட்டுக்களும் கண்டெடுக்கப் பட்டுள்ளது. குறித்த நபர் நூகலகத்தில் திருடுவதற்காக வந்துள்ளாரா? அல்லது உல்லாசமாக தங்குவதற்கு வந்துள்ளாரா? என்ற கோணங்களில் விசாணை நடாத்தப்படுகின்றது.
எது எப்படியிருப்பினும் வடக்கின் மிக முக்கிய நகரமான வவுனியா நகரை நிர்வகிக்கின்ற வவுனியா நகர சபை நிர்வாகம் விழிப்புடன் நடந்துகொள்வது நல்லது .
0 comments:
Post a Comment