நாட்டில் கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணம், சப்புரகம மாகாணம் போன்றவற்றிற்கு ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா வகைகள் சேகரிக்கும் பணி வவுனியாவில் நடைபெற்று வருகிறது.
இச் சேகரிப்பு பணி குறித்து கருத்து வெளியிட்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார
மேல் மாகாணம், சப்புரகம மாகாணம் பேன்றவற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியவசிய போருட்கள் சேகரிப்பு நடவடிக்கை தற்போது வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. இன்றிலிருந்து (20-05-2016) மூன்று நாட்களுக்கு இந்த பணி இடம்பெறும் என குறிப்பிட்ட அவர் விசேடமாக உலர் உணவுப்பொருட்கள், குடிநீர், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான சுகாதார ஆடைகள் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
0 comments:
Post a Comment