வவுனியா உக்கிளாங்குளத்தில் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி 13வயது பாலியல் துண்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்று வரை விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் மருத்துவ அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளதாகவும் விசாரணைகள் பின் செல்வதால் குற்றவாளி தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த 16.02.2016 அன்று வீட்டில் தனியாக நின்றபோது பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி பாலியல் துண்புறுத்தப்பட்டு கொடூரமாக பாடுகொலை செய்யப்பட்டார். எனினும் இன்று வரையில் குற்றவாளி இனங்கானப்படவில்லை. சந்தேகத்தில் அயல் வீட்டில் இருந்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது;டன் பொலிசாரால் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்; இவ்விடயத்தில் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு தாயார் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment