வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் இருந்த அமைச்சுக்களில் சுகாதாரமும் சுதேச மருத்துவத் துறை தவிர்ந்த புனர்வாழ்வு சமூக சேவைகள் உள்ளிட்ட அமைச்சுக்கள் இன்று பறிக்கப்பட்டுள்ளன. பறிக்கப்பட்ட அமைச்சுக்கள் முதலமைச்சர் வசம் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
முதலமைச்சருக்கு மிக நெருக்கமாக இருந்த அமைச்சரான சத்திய லிங்கத்திடம் இருந்து அமைச்சுக்கள் பறிக்கப்பட்டது தொடர்பில் நடுநிலையாளர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இருவருக்குமிடையில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும் வவுனியாவில் வர்த்தக மையம் அமைப்பதற்கான காணி தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலைதான் இந்தளவிற்கு கொண்டுசென்றதாக விடயம் அறிந்த வட்டாரங்களில் இருந்து அறியக்கிடைத்துள்ளது.
வர்த்தக மையத்தை தாண்டிக்குளத்தில் உள்ள விவசாய ஆராட்சி நிலைய காணியில் அமைப்பதில் சத்தியலிங்கம் உறுதியாக இருந்ததும், அந்தக் காணியை பெற்றுக்கொள்வதற்காக பொது அமைப்புக்கள் நடாத்திய போராட்டமும், பின்னர் வடமாகாண சபையில் சத்தியலிங்கம் கொண்டுவந்த பிரேரணையுமே முதலமைச்சரை கோவப்படுத்தியதாகவும் அதன் விளைவே இந்த அமச்சுப் பறிப்புக்கள் எனவும் பேசப்படுகின்றது .
0 comments:
Post a Comment