மும்பை,
‘‘ரகசிய கேமரா வைத்து ஆபாச படங்கள் எடுப்பதால் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கிறேன்’’ என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.
ஆபாச படங்கள்
நடிகைகளின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் கணிசமாக பரவி கிடக்கின்றன. ஆடைகளை களைந்து குளியல் அறையில் குளிப்பது போன்ற படங்கள், அரைகுறை ஆடையில் படுக்கை அறையில் இருக்கும் படங்கள், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் என்று தினம் தினம், படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இவற்றை வாட்ஸ் அப்களிலும் பரப்புகிறார்கள். பாதிக்கப்பட்ட நடிகை யாரும் போலீசில் புகார் அளிப்பது இல்லை. அந்த படத்தில் இருப்பது நான் அல்ல என்றும் ‘மார்பிங்’ செய்து வெளியிட்டுள்ளனர் என்றும் மறுத்து விடுகிறார்கள். இது ஆபாச படங்கள் எடுப்பவர்களுக்கு சவுகரியமாக போய் விடுகிறது. இந்த ஆபாச படங்கள் அனைத்துமே அவர்கள் தங்கி இருந்த ஓட்டல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது.
ரகசிய கேமரா
ஓட்டலில் வேலை பார்ப்பவர்கள் நடிகைகள் தங்கும் அறையில் ரகசிய கேமராக்களை பொருத்தி விடுகின்றனர். படுக்கை அறை, குளியல் அறைகளில் இவற்றை பதுக்கி வைக்கிறார்கள். இதன் மூலம் ஆபாச படங்களை எடுத்து இணையதளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். ‘‘இதனால் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்கு எனக்கு பயமாக இருக்கிறது’’ என்று இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது. ‘‘நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை நான் அசவுகரியமாக நினைக்கிறேன். ரகசிய கேமராக்கள் பொருத்தி வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதனால் ஓட்டல்களில் நான் தங்குவது இல்லை. வெளிநாடுகளுக்கு போகும்போதும் ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கிறேன். தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காகவும் அடிக்கடி அமெரிக்கா செல்ல வேண்டி இருக்கிறது. அங்கு ரகசிய கேமரா பயத்தினால் ஓட்டல்களில் தங்குவது இல்லை. இதனால் அமெரிக்காவில் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்துள்ளேன். இதற்காக நல்ல வீடு தேடி வருகிறேன்’’ என்றார்.
0 comments:
Post a Comment