வவுனியாவில் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்தும் 19ஆண்டு நிறைவு விழா

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்தும் 19வது ஆண்டு நிறைவு விழா கலாநிதி.தமிழ்மணி அகளங்கள் தலைமையில் இன்று (28.05.2016) காலை 9.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.நித்தியவாணி திருமதி.சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் நிருத்திய நிகேதன நுன்கலைபக் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பான இந் நிகழ்வில்,
சிறப்பு விருந்தினராக திரு.கா.உதயராஜா ( வவுனியா பிரதேச செயலாளர்) , சைவப்புலவர்.இ.நித்தியானந்தன் ( வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்) , விசேட விருந்தினராக திருமதி.அன்ரன்.எஸ்.சோமராஜா ( வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர்) , கௌரவ விருந்தினர்களாக நா.சேனாதிராசா ( சுத்தானந்த இந்து இளைஞர் சங்க தலைவர்) , சி.சுப்பிரமணியம் ( பல.நோ.கூ.சங்கம் வவுனியா), இராஜலிங்கம் ( வவுனியா வர்த்தக சங்கத்தலைவர்) , கி.கிருபானந்தா( யாழ் இலக்கிய வட்டம், செயலாளர்) , எஸ்.எஸ்.வாசன் ( மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்) மற்றும் சமூக ஆர்வலர்கள்,அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.வைத்தியத்துறையில் அளப்பெரும் சேவையாற்றிய வைத்தியத்தம்பதிகள் வைத்தியர்.சுப்பிரமணியம் சின்னத்துரை, வைத்தியர்.செந்தில்வள்ளி சின்னத்துரை மற்றும் ஆங்கிலக் கல்வித்துறையில் வவுனியாவில் அளப்பெரும் சேவையாற்றி வரும் திருமதி.இமெல்டா ஜெயநாயகி சிவகுரு அவர்களை வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா , வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன்.எஸ்.சோமராஜா அவர்களும் சான்றோர் என கௌரவம் வழங்கி கௌரவித்தனர்.வவுனியா பண்டாரிக்குளம் முதலியார் ச.தியாகராஜா அவர்களின் மகன் பொறியியலாளர் கவிஞர் தி.மகேஸ்வரராஜா அவர்கள் வழங்கும் வவுனியா பண்டாரிக்குளம் முதலியார் ச.தியாகராஜா நினைவு மாணவச் சாதனையார்கள் விருது -2016 நடைபெற்றது. பாடசாலைக்காலத்தில் தமிழியல சார்ந்த துறைகளில் மாணவர்கள் செய்த சாதனைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூபா.10000 பணப்பரிசும் சான்றிதழும் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் மாருதம் சஞ்சிகையின் 18வது இதழ் வெளியீடு நடைபெற்றது. இதன் முதற் பிரதியினை வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் இராஜலிங்கம் பெற்றுக்கொண்டார்.20160528_093234 20160528_094359 20160528_094354 20160528_094351 20160528_094013 20160528_093239

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com