LeEco என்பது ஸ்மார்ட் கைப்பேசிவடிவமைப்பில் அண்மையில் காலடி பதித்த நிறுவனம் ஆகும்.
இந் நிறுவனம் முதலில் LeEcoLe Max எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இதன் பின்னர் தற்போது LeEcoLe Max 2 எனும் வினைத்திறன் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 5.7 அங்குலஅளவு, 2560 x 1440 Pixel Resolution உயைட QHD தொடுதிரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர Qualcomm Snapdragon820 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM என்பனவற்றுடன் 64GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.
இதில் இணைக்கப்பட்டுள்ள 3100mAh மின்லகமானது Quick Charge 3.0 தொழில்நுட்பத்தின் ஊடாக விரைவாக சார்ஜ் செய்யப்படுகின்றது.
மேலும் 21 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
இதேவேளை இக் கைப்பேசியில் 3.5மில்லி மீற்றர் ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு USB வகை இணைப்பி தரப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment