இலங்கையின் வடக்குப் பகுதியில் அண்மையில் தற்கொலைத் தாக்குதல் அங்கிகள், மோட்டார் எறிகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான வேண்டுகோள் வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும்.
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைத்து பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாக இலங்கை அரசாங்கமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளது.
ஆனாலும் வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பான அரசாங்கத்தின் முடிவில் இராணுவத்தினர் அதிருப்தியுற்றிருந்தனர்.
இந்நிலையில், வடக்குப் பிராந்தியத்தில் இருந்து தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்படுவது அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதில் தடைகளை ஏற்படுத்தும் என்றும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment