தற்போதுள்ள ஊடக சுதந்திரத்தை மேலும் அர்த்தமுடையதாக்குவதற்கு சர்வதேச சட்ட விதிகளை உட்படுத்தி புதிய சட்ட முறை ஒன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அனைத்து ஊடக நிறுவனங்களுடனும் கலந்துரையாடி ஊடக அமைச்சு மற்றும் அமைச்சரவை இது குறித்த தீர்மானம் ஒன்றை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் , பிரதான ஜனநாயக நாடுகளில் கூட ஒழுக்கங்களை மீறும் ஊடக நிறுவனங்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்காக சுயாதீன நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
0 comments:
Post a Comment