வவுனியாவில் ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு புகைப்பிடிப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள் எனத் தெரிவித்து விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
விழிப்புணர்வு நிகழ்வின் போது லான்ட் மாஸ்ரர் ஒன்றில் சிகரட் புகைப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள் எனக்குறிப்பிட்ட பதாதைகள் தொங்கவிடப்பட்டு கேக் போன்று வடிவமைக்கப்பட்ட பெட்டி ஒன்று வைக்கப்பட்டு வவுனியா நகரை வலம் வந்தது.
இவ் விழிப்புணர்வு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்
உண்மையிலேயே சிகரேட் புகைப்பவர்கள் முட்டாள்கள் என சமூகம் அடையாளப்படுத்த தொடங்கி விட்டது. ஏமாறுவர்கள் கொஞ்சம் விழிப்படைய வேண்டும் . இந்த வருடம் இந்த வாழ்த்து உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் இனி வரும் வருடத்தில் பொருத்தாமல் பார்த்தல் .நீங்களும் இந்த வாழ்த்திலிருந்து தப்பித்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
0 comments:
Post a Comment