வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம்

chgkhgjkகையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும்  குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்துக்கு (FSHKFDR – Vavuniya District) புதிய நிர்வாகக்குழு தெரிவுகள் இடம்பெற்று மீளக்கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் இன்று (06.04.2016) காலை 11.00 மணிக்கு இதற்கான மீள்தகவமைவுக்கலந்துரையாடல் இடம்பெற்றது.


வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் (FSHKFDR – Tamil Homeland) தலைமை ஒருங்கிணைப்பாளருமாகிய கோ.ராஜ்குமார்(ராஜா) தலைமையில் நடைபெற்ற குறித்த மீள்தகவமைவுக்கலந்துரையாடலில்,


வவுனியா மாவட்டத்திலுள்ள ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் உபதலைவர் நா.நடராசா, உபசெயலாளர் கு.இராசேந்திரகுமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, குழுவின் இணைப்பாளர் எஸ்.றொஹான் ராஜ்குமார், நகரப்பகுதி இணைப்பாளர் க.கோணேஸ்வரன் உள்ளிட்ட தலைமைக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தின், (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Vavuniya District)…


தலைவர் மற்றும் ஊடகப்பேச்சாளராக திருமதி.கா.ஜெயவனிதா,

உபதலைவராக திரு.வே.புண்ணியம்,

செயலாளராக திருமதி.து.கலாவதி,

உபசெயலாளராக திருமதி.ம.வானதி,

பொருளாளராக திரு.க.பழனிநாதன்,

தலைமை ஒருங்கிணைப்பாளராக திருமதி.பே.பாலேஸ்வரி,

உதவி ஒருங்கிணைப்பாளராக செல்வி.தி.சாருசா,

நெடுங்கெணி பிரதேச இணைப்பாளராக திருமதி.யோ.சகுந்தலா,

செட்டிகுளம் பிரதேச இணைப்பாளராக திருமதி.இ.தவமணி,

கோவில்புளியங்குளம் – ஆச்சிபுரம் பகுதிகளின் இணைப்பாளராக திருமதி.க.சுமதி,

புளியங்குளம் – கனகராயன்குளம் பகுதிகளின் இணைப்பாளராக திருமதி.நா.நாகம்மா,

பாலமோட்டை – ஓமந்தை பகுதிகளின் இணைப்பாளராக திரு.சற்குணம்,

நெளுக்குளம் – கூமாங்குளம் பகுதிகளின் இணைப்பாளராக திருமதி.வே.சிவராணி,

சிதம்பரபுரம் பகுதி இணைப்பாளராக திருமதி.உ.சரஸ்வதி,

மறவன்குளம் பகுதி இணைப்பாளராக திருமதி.கை.பூவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த மீள்தகவமைவுக்கலந்துரையாடலுக்கான மண்டப வாடகை மற்றும் மதிய போசனத்துக்கான நிதியுதவியை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கியிருந்தார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com