மன்னாரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் தொழிற்பயிற்சி கல்வியை கற்று வந்த மாணவி ஒருவருடன்,குறித்த கல்வி நிறுவனத்தின் இயக்குனர் தகாத முறையில் நடந்து கொண்ட நிலையில் குறித்த கல்வி நிறுவனத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த 28 ஆம் திகதி மன்னாரில் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
மன்னாரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் தொழிற்பயிற்சி கற்கை நெறி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.குறித்த கற்கை நெறியில் பலர் கலந்து கொண்டு கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த (7-03-2016) அன்று குறித்த நிறுவனத்தின் இயக்குனர் அங்கு தொழிற் பயிற்சியை கற்று வந்த யுவதி ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த யுவதி நீண்ட நாற்களின் பின் தனது தந்தையிடம் முறையிட்டுள்ள நிலையில் குறித்த கல்வி நிலையத்தின் இயக்கனருக்கு எதிராக பாதீக்கப்பட்ட யுவதியின் தந்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மன்னார் பிரஜைகள் குழு,மன்னார் மாதர் ஒன்றியம் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த கல்வி நிறுவனத்தின் இயக்குனர் கடந்த 28 ஆம் திகதி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.இதன் போது குறித்த நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment