முதலிரவு அன்று முன்னாள் காதலனுடன் மணமகள் தப்பி ஓட்டம்!

first-nightகண்டி உட­ஹே­வா­ஹெட பிர­தேசத்தில் புதி­தாக திரு­ம­ண­மாகி மண­மகனின் வீட்­டுக்கு வந்­தி­ருந்த மண­மகள், அன்றைய தினம் இரவே தனது முன்னாள் காத­ல­னு டன் தப்பிச் சென்­றுள்ள சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.


கடந்த 23 ஆம் திகதி இரு­ வீட்­டாரின் ஏற்­பாட்டில் இத் திரு­மணம் இடம்­பெற்­றி­ருந்­தது.சம்­பவம் இடம்­பெற்ற தினத்­தன்று குறித்த மண­மக்­க­ளுக்கு முத­லி­ரவு ஆயத்­தங்கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.அவ்­வாறு ஆயத்தம் செய்­யப்­பட்­டி­ருந்த அறை­யினுள் மண­மகன் சென்று பார்த்த போது அங்கு மண­மகள் இருக்­க­வில்லை. எனினும் அவர் வந்து விடுவாள் என மண­மகன் சிறிது நேரம் காத்­தி­ருந்­துள்ளார்.வெகு­நே­ர­மா­கியும் மண­மகள் வரா­ததால் சந்­தேகம் கொண்ட மண­மகன் இவ்­வி­டயம் தொடர்பில் வீட்­டா­ருக்கு தெரி­வித்து விட்டு வீடு முழு­வதும் தேடியும் காணப்­ப­ட­வில்லை.சற்று நேரத்­துக்கு முன்­பாக குறித்த வீட்­டி­ன­ருகில் இருந்து முச்­சக்­கர வண்டி ஒன்று புறப்­பட்டு சென்­றி­ருந்­த­த­துடன் மண­மகள் அதில் சென்­றி­ருக்­கலாம் என வீட்டார் சந்­தே­கித்­துள்­ளனர்.மண­மகள் தனது பெற்றோர் வீட்­டுக்கு சென்­றி­ருப்­பாரோ என்ற சந்­தே­கத்தில் பெண் வீட்­டாரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்­களும் தங்­க­ளது மகள் இங்கு வர­வில்லை என தெரி­வித்­துள்­ளனர்.மண­ம­களின் தொலை­பே­சிக்கு தொடர்பு கொண்ட போதும் எவ்­வித பதிலும் கிடைத்­தி­ருக்­க­வில்லை.எனினும் சிறிது நேரத்தின் பின் குறித்த பெண் தனது பெற்­றோ­ருடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு தான் இங்கு சந்­தோ­ச­மாக இருப்­ப­தா­கவும் தன்னை தேட வேண்டாம் எனவும் தெரி­வித்­தி­ருந்தார்.இத­னை­ய­டுத்த இரு வீட்­டாரும் விரைந்து அரு­கி­லுள்ள பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று முறைப்­பாடு செய்­த­தோடு பெண்ணின் பெற்றோர் தனது மக­ளுக்கு தொலை­பே­சி­யி­னூ­டாக அழைப்பு விடுத்து இப் பிரச்­சி­னையை தீர்த்துக் கொள்ள பொலிஸ் நிலை­யத்­துக்கு வரு­மாறு அழைத்­தி­ருந்­தனர்.அவரும் அதற்­கி­ணங்க அவர்கள் குறிப்­பிட்ட தினத்தில் பொலிஸ் நிலை­யத்­திற்கு வரு­வ­தாக அறி­வித்தார்.இந்­நி­லையில் அவரின் வரு­கைக்­காக இரு­த­ரப்­பி­னரும் நாள் முழு­வதும் பொலிஸ் நிலை­யத்தில் காத்­தி­ருந்த போதும் அங்கு வரவில்லை.பின்னர் இப் பெண் தனது முன்னாள் காதலனுடன் சென்றுள்ளார் என்பதனை விசாரணைகளின் மூலம் அறிந்த கொண்ட பொலிஸார் மணப் பெண்ணை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com