துர்முகி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

Find-Your-Lucky-Numbers-in-Numerology-Step-5-Version-2-324x160 

 

 

 

  

 

meshamமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)


இந்த துர்முகி தமிழ் வருடத்தில் ஆடி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் உதவிகளைப் பெற்று நலமடைவர். பொருளாதார வளம் உயரும். அரசு அதிகாரிகள் உங்கள் காரியங்களுக்கு உறுதுணையாக இருப்பர். எதிலும் சிந்தித்து நல்ல முறையில் செயல்படுவர். பழைய கடன்களும் வசூலாகும். மனதிற்கினிய வெளியூர் பயணங்களைச் செய்வர். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் போட்டிப்போட்டுக் கொண்டு உதவி செய்ய முன்வருவர். பெரியோர்களின் ஆசிகளைத் தேடிப் பெறுவர். உங்கள் பேச்சில் கம்பீரமும் நடையில் மிடுக்கும் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் லட்சியங்களை அடைய பாடுபட்டு உழைப்பீர்கள். மேலும் இந்த காலகட்டத்தில் யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வர்.
ஆவணி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவீர்கள். வெளியில் இந்த காலகட்டத்தில் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்கள் பெயரில் கடன் வாங்கித் தர வேண்டாம். வருமானத்திற்குக் குறைவு வராது. உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் தேடி வரும். நீண்டகால லட்சியங்கள் கனவுகள் நிறைவேற அடித்தளம் அமைத்துக் கொள்வர்.

தை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானம் கூடத் தொடங்கும். ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். நீங்கள் செய்த உதவிகளை மறந்து உங்களை விட்டு பிரிந்தவர்கள் மனம் மாறி மறுபடியும் உங்களைத் தேடி வருவர். எதிரிகளை அவர்களின் வழியிலேயே சென்று திருத்துவீர்கள். அறிவுப்பூர்வமான ஆலோசனைகளை எவர் வழங்கினாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுவர். புதிய கடன்கள் எதையும் வாங்கி சொத்துக்கள் வாங்க வேண்டாம். மேலும் பூர்வீகச் சொத்து விஷயங்களிலும் பெரிய ஆதாயங்களைப் பெற முடியாமல் போகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவர். இருப்பினும் திட்டமிட்ட வேலைகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடித்து விடுவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டு. கோபமாக இருந்த மேலதிகாரிகள் நட்பு பாராட்டுவர். உத்தியோக விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கப் பெறுவர்.

வியாபாரிகளுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய வாகனங்களை வாங்கி அதில் சரக்குகளை ஏற்றி புதிய சந்தைகளில் விற்க முயல்வீர்கள். தேவையில்லாத சில அலைச்சல்கள் உண்டானாலும் முடிவு சாதகமாகவே அமையும். கூட்டாளிகள் உங்கள் பொறுப்புகளை சிறிது குறைப்பார்கள். விவசாயிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். உங்கள் வருமானத்தைப் பங்கு போட நினைக்கும் இடைத்தரகர்களிடமிருந்து விலகி விடுவீர்கள். புதிய குத்தகைகள் தேடாமலேயே கிடைக்கும். புதிய விவசாய உபகரணங்களையும் வாங்கி விளைச்சலை பெருக்குவர்.

அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருந்து காரியமாற்றவும். நம்பிக்கை மோசம் போக வாய்ப்புள்ளது. எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையில் சில தவறுகளைச் செய்யலாம். கட்சியில் நல்ல பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே இருக்கும். கலைத்துறையினருக்கு பணவரவு அதிகரிக்கும். சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திறமைக்கேற்ற பெயரும் புகழும் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவர். ரசிகர்களின் ஆதரவுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்தி திறமையை பறைசாற்றுவர். துறையில் புதிய யுக்திகளைப் புகுத்துவர். பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டினால் ஆன்மிக பலம் கூடும்.

மாணவமணிகளுக்கு உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கும் மேலும் சில இடையூறுகள் தோன்றினாலும் குறிக்கோளை நோக்கி தைரியமாக முன்னேறுவர். படிப்பில் படிப்படியான முன்னேற்றங்களைக் காண்பர். பெற்றோரால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

rishabamரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)


இந்த துர்முகி தமிழ் வருடத்தில் ஆடி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வெகுநாளாக தடைபட்டு வந்த வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைகூடும். தெய்வ வழிபாட்டிலும் ஈடுபாடு அதிகரிக்கும். பிறரின் முகபாவனைகளைக் கண்டு அவர்களின் மனதை அறிந்து கொள்வர். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வர். தீயவர்கள் உங்களை விட்டுத் தானாகவே விலகி விடுவர். பூர்வீகச் சொத்துகளில் திடீரென்று பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீர்ந்துவிடும். உடன்பிறந்தோர் வழியில் சில சலசலப்புகள் தோன்றி மறையும். இக்கட்டான சூழ்நிலைகளில் வளர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் இருந்து சமாளிக்க வேண்டிய காலகட்டமிது.


ஆவணி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். உங்கள் புகழும் கௌரவமும் உயரும். இதுநாள் வரை வீண்பழி சுமந்தவர்கள் அவற்றிலிருந்து விடுபடுவர். முயற்சிகள் பலமடங்காக உயர்ந்து அதற்கேற்ற வெற்றியும் பெறுவர். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். திருமணம் தட்டிப்போனவர்களுக்கு சிறப்பான இடத்தில் திருமணம் கைகூடும். குழந்தைகளை வெளியூர் வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் சந்தோஷம் கூடும். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலைதூக்க நேரலாம். கவனத்துடன் அதை தவிர்த்துக் கொள்ளவும்.


தை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் பேச்சாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். உங்கள் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வர். புதிய செலவுகளைத் தவிர்க்கவும். சேமிப்புகளிலும் ஈடுபடவும். மற்றபடி குடும்பத்தாருடன் ஆன்மிகச் சுற்றுலா சென்று வரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் குறைந்து காணப்படும். மேலதிகாரிகளிடமும் சக ஊழியர்களிடமும் இணக்கமான சூழ்நிலைகள் உருவாகும். சிலருக்கு அலுவலக வேலைகளில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உருவாகும். இது சாதகமான ஆண்டாகவே அமைகிறது. மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களால் நன்மைகள் உண்டாகும். பணவரவுக்கு ஒன்றும் குறைவு இருக்காது. வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பர். தடைகளைச் சமாளிக்கும் தைரியத்தையும் பெறுவர். அதோடு சாதுர்யத்துடன் செயல்பட்டு போட்டிகளைச் சமாளிப்பர். அரசாங்கத்தால் சில அனுகூலங்களையும் பெறுவர். புதிய சந்தைகளில் வியாபாரத்தைப் பெருக்க விற்பனை பிரதிநிதிகளை நியமிப்பீர்கள். சிறிது கடன்வாங்கி புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவர். நண்பர்களும் உதவிகரமாக இருப்பர்.


விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் புதிய கால்நடைகளையும் வாங்குவர். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். பண விஷயங்களில் யாரையும் நம்பாமல் தனித்தே செயல்படவும்.


அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் வளரும். செய்யும் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கவனத்துடன் செயல்பட்டு கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவர்.  தொண்டர்களின் ஆதரவு உங்களுக்கு நல்ல முறையிலேயே கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து மனக்குழப்பங்களில் இருந்து விடுபட்டு விடுவீர்கள். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவர். சக கலைஞர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வர்.


பெண்மணிகள் புத்தாடை அணிமணிகளை வாங்குவர். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர்களால் நன்மை உண்டாகும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். ஆன்மிகத்தில் ஆர்வம் பெருகும். தேவைக்கேற்ற பணவரவைப் பெறுவர். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். பெற்றோர் பக்கபலமாக இருப்பதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். நண்பர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.


பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.mithunamமிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)


இந்த துர்முகி தமிழ் வருடத்தில் ஆடி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் திடசிந்தனைகளிலும் தைரியத்திலும் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு புதிய வழிகள் உதயமாகும். குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள். மேலும் சமுதாயத்தில் உயர்ந்தோரின் தொடர்புகளை உருவாக்கிக் கொள்வர். குடும்பத்தில்  சுப நிகழ்ச்சிகளை நடத்த முனைவீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறையில் படிப்படியாக உயர்ந்து உச்சியை எட்டிவிடுவீர்கள். தெளிவான மனத்துடன் பணியாற்றுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த காலத்தில் முடித்து வெற்றி பெறும் காலகட்டமிது.


ஆவணி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் சில அனாவசிய பயணங்களைச் செய்ய நேரிடும். புதிய யுக்திகளைப் புகுத்தி செய்தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள். நேர்முக மறைமுக போட்டிகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உடலில் இருந்த நோய்கள் அனைத்தும் மறைந்துவிடும். புதுப்பொலிவுடன் திகழ்வர். சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல் முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள். போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெறுவர். பங்கு வர்த்தகம் போன்ற துறைகளின் மூலமும் நல்ல வருமானம் வர, பிரகாசமான வாய்ப்புகள் உருவாகும். பெற்றோரின் ஆதரவுண்டு.


தை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். சிறிய அளவு முயற்சிகளிலும் பெரிய அளவுக்கு வெற்றியைக் காண்பர். சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும் வாய்ப்பு ஏற்படும். சரியாக சிந்தித்து தெளிவான முடிவு எடுப்பர். குழந்தை இல்லாதவருக்கு மழலை பாக்கியம் உண்டாகும். சமூகத்தில் பலதரப்பட்ட மக்களைச் சந்திப்பர். இதன் மூலம் பிரபலஸ்தர் ஆவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.


உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில அனுகூலங்களைக் காண்பர். சிலர் வெளியூருக்கு மாற்றலாகிச் செல்லும் நிலை ஏற்படும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாக நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்.பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். வியாபாரிகள் நன்கு யோசித்து புதிய முதலீடுகளைச் செய்வர். மேலும் பல்வேறு சந்தைகளில் பொருள்களை விற்று விற்பனையை உயர்த்துவர்.


தொழிலில் சிறு தடைகள் ஏற்படினும் அவற்றைச் சமாளிக்கும் தைரியத்தையும் பெறுவர். வரவேண்டிய பணம் வந்து சேரும். பழைய கடன்கள் வசூலாகும். கொடுக்கல் வாங்கல்களில் எந்தச் சிரமமும் ஏற்படாது. மேலும் போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும் ஆண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கால்நடைகள் வைத்திருப்போர் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். பால் வியாபாரத்தையும் பெருக்கிக் கொள்வர்.


அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் காண்பர். அதனால் கட்சி மேலிடத்தில் பாராட்டுகளையும் பெறுவர். வேலைகளை சிரமமின்றி முடித்துவிடுவர். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் அரவணைப்பும் இருப்பதால் எண்ணங்கள் ஈடேறி புதிய பொறுப்புகள் பெறுவர். மேலும் உள்கட்சி விவகாரங்களில் தலை நுழைக்க வேண்டாம். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகள் பெறுவர். பெயரும் புகழும் கூடும். சக கலைஞர்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்வர்.


பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகும். உற்றார் உறவினர்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் பணவரவு நன்றாக இருக்கும். ஆடை ஆபரணங்களை வாங்குவர். மன அமைதிபெற ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். விருந்தோம்பலில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குழந்தைகளால் குடும்பத்தில் பெருமை உண்டாகும்.


மாணவமணிகள் படிப்பில் முழு ஆர்வத்துடன் ஈடுபடவும். கல்வியில் முயற்சிக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவர். முயற்சிகளை சரியான முறையில் ஒரு மனதோடு செய்தால் ஆசிரியர்களிடம் நற்பெயரை எடுக்க முடியும். விளையாட்டுகளில் வெற்றியும் விருதுகளும் கிடைக்கும்.


பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.katakamகடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)


இந்த துர்முகி தமிழ் வருடத்தில் ஆடி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். நண்பர்களும் உங்களின் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். பொருளாதார நிலை உயரும். பெயர், புகழ் கூடும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வருமானம் நகரத்தொடங்கும். சமுதாயத்தில் உயரிய பொறுப்புகள் தேடி வரும். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டகலும். உங்கள் அணுகுமுறையால் பகைவர்களை நண்பராக்கிக் கொள்வீர்கள். சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்களை திருப்பி அடைப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.


ஆவணி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்லாற்றும் விதத்தை மாற்றிக் கொள்வர். அரசாங்கத்தின் மூலம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுப்பீர்கள். தெய்வகாரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நெடுநாளாக விற்காமல் இருந்த பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையாகும். மனதில் தைரியம் பிறக்கும். மேலும் தனித்து காரியங்களைச் செய்வதைவிட நண்பர்களுடன் சேர்ந்து காரியங்களைச் செய்யுங்கள். வாழ்க்கையில் புதிய சூழ்நிலைக்கு உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இல்லத்திற்குத் தேவையான நவீன பொருள்களை வாங்கும் காலகட்டமாக இது அமைகிறது.


தை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அனைத்து செயல்களிலும் வெற்றியடைவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். கடினமான சூழ்நிலைகளிலும் உங்கள் தனித்தன்மையை இழக்கமாட்டீர்கள். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாயார் வழி உறவில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருப்பீர்கள். மேலும் யாராக இருந்தாலும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். அரசாங்கத் தொடர்புகள் சாதகமாகவே இருக்கும். நீண்ட தூரப்பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் உங்கள் செல்வாக்கு உயரும். மேலும் வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சுமை அதிகரிக்கும். உங்கள் பணியில் மேலதிகாரிகள் குறை காண காத்திருப்பர். அதனால் விழிப்புணர்வுடன் கடமைகளைச் செய்யவும்.  அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்கள் உங்களின் வேலைச் சுமையை பகிர்ந்து கொள்வர். எதிர்பார்த்த பதவி உயர்வு சிறிது காலதாமதத்திற்குப் பிறகு கிடைத்துவிடும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நிலவி வந்த போட்டி பொறாமைகள் குறைந்து விடும். கவனத்துடனிருந்து வியாபாரத்தை விரிவு படுத்தவும். கொடுக்கல் வாங்கல்களில் சில சிரமங்கள் ஏற்படலாம். சில நேரங்களில் நண்பர்களிடமும் கூட்டாளிகளிடமும் மனக்கசப்புகள் உண்டாகலாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வரும். நீர்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வர். மகசூல் பெருகி நல்ல லாபத்தைக் காண்பர். கால்நடைகள் மூலம் நலன் பெருகும்.


அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். உங்கள் விருப்பப்படி வேலைகளை செய்து முடிப்பீர்கள். மக்களைக் கவரும் வண்ணம் உங்களின் செயல்கள் இருந்து வரும். தொண்டர்களையும் அனுசரித்து நடந்து கொள்வர்.  இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்வர். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களும் கைகூடும். மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவர். பயணங்களால் எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும்.


பெண்மணிகள் குடும்பத்தில் சிறு குழப்பங்களைச் சந்திப்பர். அவைகளை பெரியோர்களின் ஆலோசனைப்படி சரி செய்து விடுவர்.


மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் கடினமாக படிப்பர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவிகளைப் பெறுவர்.


பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.simhamசிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)


இந்த துர்முகி தமிழ் வருடத்தில் ஆடி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழிபிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி அவைகளைப் படிப்படியாக வெற்றிகரமாக நிறைவேற்றுவர். புதிய தொழில்களைத் தொடங்குவர். நண்பர்கள், உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் இசைந்து நடப்பர். பெரியோர்களின் ஆதரவு பெருகும். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்து புண்ணியத்தை தேடிக் கொள்வர். தன்னலம் பார்க்காமல் உழைத்து புகழடைவர். உழைப்பிற்கும்மேல் லாபமுண்டு. கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்குவர்.


ஆவணி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்களுக்கு வழிகாட்டுவர். புதிய தொழில் முயற்சிகளும் நல்ல முறையில் கை கொடுக்கும். வருமானம் வந்து கொண்டிருந்தாலும் வரவுக்கு முன்பே செலவு காத்து கொண்டிருக்கும். அதனால் செலவு செய்யும் நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும். நீண்டநாள் வழக்குகள் சாதகமாக அமையும். குடும்பத்தில் குதூகலம் பூத்து குலுங்கும். குடும்பத்தாருடன் ஆலயங்களுக்குச் செல்வீர்கள். மழலை பாக்கியம் உண்டாகும்.


இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகளை மேற்படிப்புக்கு வெளிநாடுகளுக்கும் அனுப்புவர். சமூகத்தில் மதிப்பு மரியாதை நிறைந்திருக்கும். புதிய வீடு வாங்க வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும்.


சிலருக்கு புதிய வீடு மாற்றம் செய்யவும் வாய்ப்புண்டு. பூர்வீகச் சொத்துக்களில் சுமுகமான பாகப்பிரிவினை நடக்கும் காலகட்டமாக அமைகிறது.


தை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உடன்பிறந்தோரிடம் ஒற்றுமை பலப்படும். புதிய தொழில் தொடங்க புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக் கொண்டு செயல்படுவீர்கள். சட்டப்பிரச்னைகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வீர்கள். உற்றார் உறவினர்கள் இல்லம் தேடி வருவர். உடன்பிறந்தோருக்கும் உங்களால் ஆன உதவிகளைச்


செய்வீர்கள். இந்த காலகட்டத்தில் கடுமையாக உழைப்பீர்கள். தாயின் உடல்நலம் சிறிது பாதிக்கப்படலாம். மருத்துவச் செலவுகளும் செய்ய நேரிடும். இல்லத்தில் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும் ஆண்டாக இது அமைகிறது.


உத்தியோகஸ்தர்கள் கடின உழைப்பை தங்கள் மூச்சாகக் கொண்டு உழைப்பர். சுறுசுறுப்புக்கு முதலிடம் கொடுத்து காரியமாற்றுவர். மேலதிகாரிகள் சற்று பாராமுகத்துடன் இருப்பர். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகவும். வருமானம் சிறக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமுண்டு. வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த சிக்கல்கள் விலகி சுமுகம் உண்டாகும். புதிய விற்பனை யுக்தியை பயன்படுத்துவர். சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். போட்டியாளர்களின் நேர்முக மறைமுக எதிர்ப்புகள் குறையும். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும்.


எதிர்பாராத பணவரவுண்டு. பாசன வசதிகளில் கவனம் செலுத்துவர். உடன் வேலை செய்பவர்களிடம் சரியான ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். புதிய குத்தகை முயற்சிகளைத் தள்ளிப்போடவும்.


அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்ட வேலைகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அனைத்தும் வெற்றி பெறும். சிறு அலைச்சல்கள் உண்டாகும். கட்சி மேலிடத்தில் உங்களிடம் கருணை காட்டுவர். புதிய பொறுப்புகள் தேடி வரும். நண்பர்கள்போல் பழகும் எதிரிகளிடம் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்கள் முடித்துக் கொடுப்பதில் சிரமங்கள் உண்டாகும். திறமைகள் பளிச்சிடும்.


பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையோடு இருப்பர். தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும். குடும்பத்தில் அன்யோன்யம் கூடும். ஆடை ஆபரணங்கள் சேரும். உடலாரோக்கியம் சிறக்கும்.


உறவினர்களை அரவணைத்துச் செல்லவும். மாணவமணிகள் கல்வியில் நன்றாகத் தேர்ச்சி பெறுவர். பெற்றோர் உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வர். படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.


பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.kanniகன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)


இந்த துர்முகி தமிழ் வருடத்தில் ஆடி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நன்கு யோசித்து முடிவெடுப்பர். எதிலும் நிதானத்துடனும் அளவெடுத்து சிறப்பாகவும் பணியாற்றுவர். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பேசி காரியங்களை சாதித்துக்கொள்வர். குடும்பத்தில் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பூர்வீகச் சொத்துக்கள் சிரமமில்லாமல் வந்து சேரும். ஆலயத்திருப்பணிகள், தர்மகாரியங்களில் ஈடுபடுவர். வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். உடலாரோக்கியம் சிறக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும்.


வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பர். ஆவணி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் ஒத்த கருத்துள்ளோரையும் மாற்றுக் கருத்துள்ளோரையும் சமமாக பாவிக்கும் பக்குவத்தைப் பெறுவர். செயல்களில் சுறுசுறுப்பு


கூடும். பேச்சாற்றலால் அனைவரையும் வசப்படுத்துவர். உங்கள் நல்ல எண்ணங்கள் சரியான இலக்குகளை எட்டும். தனிப்பட்ட பண்புகளை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை அறிந்து செயல்படுவர். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. பழைய கடன்களை அடைப்பர். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். சமயோசித புத்தியால் உற்றார் உறவினர்களின் வஞ்சக எண்ணங்களைச் செயலிழக்கச் செய்வர். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.


தை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உடன்பிறந்தோருக்கு உங்களால் நன்மை உண்டாகும். எதிலும் உத்வேகத்துடன் ஈடுபடுவர். சிலருக்கு புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வர். வீண் பழிகள், வழக்குகளில் இருந்து குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படுவர். மனச்சோர்வைப் போக்க யோகா, பிராணாயாமம் செய்வர். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளை முன்னேற்ற பாதையில் செல்ல ஊக்கப்படுத்துவர். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல வாய்ப்புகள் தேடிவரும். அரசாங்கத்தின் மூலம் நன்மைகளையும் சலுகைகளையும் பெறுவர்.


வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ளும் ஆண்டாக இந்த காலகட்டம் அமைகிறது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்களின் எண்ணங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலைப்பளுவை சக ஊழியர்களின் உதவியால் குறைத்துக்கொள்வர். எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவர். மூத்த அதிகாரிகள் உங்களுடன் நட்பாகப் பழகுவர். அலுவலகப் பிரச்னைகள் படிப்படியாக குறையும். வியாபாரிகள் முயற்சிக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். செயல்களில் பல தடைகளுக்குப்பிறகே வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகள் செய்து தொழிலை விரிவுபடுத்துவதைவிட, இருப்பதை நேர்த்தியாகச் செய்து முடிப்பது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். வருமானமும் நன்றாகவே இருக்கும். புதிய நிலங்களை வாங்குவர். கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையுடனிருந்து வங்கிகளிடம் சலுகைகளைப் பெறுவர். வருங்காலச் சேமிப்புகளில் ஈடுபடுவர். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வர்.


அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை திடத்துடன் செயல்படுத்துவர். மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருக்கும். சமூகத்தில் கௌரவமான பதவிகளில் அமர்வர். ரகசியங்களை எவரிடமும் பரிமாற வேண்டாம். தடையாய் இருந்தவர்கள் விலகுவர். கலைத்துறையை சேர்ந்தவர்கள் புகழைத் தக்கவைத்துக் கொள்ள சீரிய முயற்சிகளைச் செய்வர். சிலருக்கு புதிய வீடு, வாகன யோகங்கள் உண்டாகும்.


பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கைகள் உண்டாகும். சுற்றுலா சென்று மகிழ்ச்சியைக் கூட்டிக்கொள்வர். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து காணப்படும். குழந்தைகளால் சந்தோஷம் நிறையும். வெளிவட்டார செல்வாக்கு உயரும். மாணவமணிகள் நீண்ட காலத் திட்டங்கள் தீட்டுவர். எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவர். கல்வியில் முன்னேற பயிற்சி மேற்கொள்ளவும். நண்பர்களின் உதவி உண்டு.


பரிகாரம்: பார்வதி -பரமேஸ்வரரை வழிபட்டு சிறப்படையுங்கள்.thulamதுலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)


இந்த துர்முகி தமிழ் வருடத்தில் ஆடி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் மெத்தனத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு தெளிவுடன் பணியாற்றுவர். தீயோரின் நட்பை தவிர்த்து விடுவர். செய்தொழிலில்


புதிய யுக்திகளைப் புகுத்துவர். சுறுசுறுப்புடன் பணியாற்றி வெற்றியும் பெறுவர். தொழிலில் வருமானம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தலைமை தாங்கி வழிநடத்தி செல்லும் அளவிற்கு உயர்வர். கல்வி கேள்விகளில் அரிய சாதனைகள் புரிய வாய்ப்புண்டு. குடும்பத்தில் அமைதி நிறையும். செல்வத்தோடு செல்வாக்கும் உயரும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து தக்க உதவியும் கிடைக்கும். தன்னம்பிக்கை உயர்வதுடன் பேச்சில் வசீகரமும் நடையில் கம்பீரமும் ஏற்படும்.


ஆவணி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் எதிர்பார்த்த மாற்றங்களைக் காண வேண்டியிருக்கும். வருமானம் பல வழிகளிலும் கிடைக்கும். ஸ்பெகுலேஷன் துறையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். செயல்களை நேர்வழியில் செய்யவும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். உடன்பிறந்தோரிடம் உங்கள் எண்ணங்களைத் தயக்கமில்லாமல் வெளிப்படுத்துவீர்கள். திடீரென்று பிரபலமாகும் யோகம் இந்த காலகட்டத்தில் கிடைக்கும் என்றால் மிகையாகாது.


தை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் நன்கு யோசித்து புதிய முயற்சிகளில் இறங்குவர். மனதில் இருந்த கவலைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவர். உங்களுக்குக்கீழ் கம்பீரமாக வலம் வருவர். வருமானம் நன்றாக இருக்கும். வழக்குகளில் வாய்தாக்கள் கிடைக்கும். எதிர்காலத்தை வளமாக்கும் திட்டங்களை அடையாளங்கண்டு அவற்றில் முதலீடு செய்வர். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கவும்.


உத்தியோகஸ்தர்கள் கோரிக்கைகள் மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பர். அலுவலகத்தில் சிறப்பான சூழ்நிலைகளில் இருப்பர். சக ஊழியர்களும் நட்பு பாராட்டுவர். அனைத்து இடையூறுகளையும் கடந்துவிடுவர். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்ய வேண்டி வரும். இந்த பயணங்கள் உங்கள் வாழ்க்கையில் திருப்பங்களைக் கொண்டு வரும்.சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். ஊதியம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வர்.


கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக வியாபாரிகளின் போட்டிகளைச் சந்திப்பர். மற்றபடி முன்னேற்றமான ஆண்டாக இது அமைகிறது. விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும்.


புதிய விவசாய உபகரணங்களை வாங்கி விவசாயத்தை நவீனமாக்குவர். கால்நடைகளால் நல்ல பலனுண்டு. மேலும் நல்ல விளைச்சலையும் வருமானத்தையும் காண்பர்.


அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்ட காரியங்கள் எளிதில் வெற்றியடையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வர். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கட்சி பிரசாரங்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவர். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பர். புதிய பொறுப்புகளில் கவனத்துடன் ஈடுபடவும். தொண்டர்களின் ஆதரவினால் சாதனைகள் செய்வர்.


கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நல்ல முறையில் முடித்துக் கொடுப்பர். புகழும் பாராட்டும் கிடைக்க சற்று காலதாமதம் உண்டாகும். சக கலைஞர்களுடன் சச்சரவுகள் இல்லாமல் நடந்து கொள்ளவும். ரசிகர்களை அரவணைக்கவும். பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையோடு இருப்பர். உற்றார் உறவினர்கள் நண்பர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவர். குடும்பத்திலும் சந்தோஷத்தைக் காண்பர். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். மேலும் குழந்தைகளையும் ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவர். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளில் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு தீர்த்துக் கொள்வர்.


மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். நன்றாக உழைத்து முதல் மதிப்பெண்ணைப் பெறுவர். எதையும் சிந்தித்துப் பார்த்து செயலாக்குவர். விளையாட்டிலும் வெற்றி பெறுவர். வெளி விளையாட்டுகளில் ஆர்வம் குறையும். தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடவும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.விருச்சிகம்
viruchikam

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)


இந்த துர்முகி தமிழ் வருடத்தில் ஆடி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அதிகமான பயணங்கள் செய்ய நேரிடும். தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களிடமிருந்து விலகி வந்த உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து நன்மதிப்பு பெறுவர். செய்தொழிலில் வளர்ச்சி கூடும். பெயரும் புகழும் உயரும். நண்பர்களை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வீர்கள். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும்.


குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் சில தியாகங்கள் செய்வர். எதிரிகளை வெல்வர். சமுகத்தில் கௌரவமான பதவிகளும் தேடிவரும். வருமானம் நன்றாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும்.


ஆவணி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்குவர். உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். சரியான நேரத்தில் ஆகாரம் உட்கொள்வதால் நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம். நண்பர்களிடம் கோபத்தை தவிர்த்து அன்புடன் இருக்கவும். ஆரோக்கியமான எண்ணங்கள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் அகலும். புதிய உறவுகள் தேடிவரும்.


தை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்களின் கற்பனை சக்தி அதிகரிக்கும். புதிய படைப்புகளை உருவாக்குவதில் அக்கறை காட்டுவர். சோதனைகளை சாதனைகளாக மாறறிக் கொள்வர். முதலீடு இல்லாமல் அறிவைத் துணை கொண்டு முயற்சிகளில் வெற்றி பெறுவர். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெறுவர். குடும்பத்தில் குதூகலம் நிறையும். வருமானம் பெருகும்.


புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவர். திட்டமிடாது செய்யும் காரியங்களிலும்கூட வெற்றி பெறும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை பதற்றமில்லாமல் அமைதியாகச் செய்வர். வேலைகளில் திறமைகளை வெளிப்படுத்துவர். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் உதவியால் வேலைப்பளு குறையும். மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும். உங்கள் செயல்பாடுகளுக்கு இந்த ஆண்டு அங்கீகாரம் கிடைத்துவிடும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பயனடைவர். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்கள் தீட்டுவர். அரசாங்க வழியில் கெடுபிடிகள் கூடுமாகையால் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவும். விவசாயிகள் இந்த துர்முகி ஆண்டில் சலிப்பில்லாமல் உழைப்பர். விளைச்சல் நன்றாக இருக்கும். சந்தையில் போட்டிகளைச்


சந்திக்க நேரும். புத்திக்கூர்மையால் நல்ல லாபம் அள்ளுவர். கழனிகளை விரிவு படுத்தும் எண்ணம் மேலோங்கும். நிலத்தகராறு, சொத்துத் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். கால்நடைகளால் சில செலவுகளையும் சந்திக்க நேரிடும்.


அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் வளரும். புதிய பதவிகள் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். கடமைகளை சுறுசுறுப்புடனும் திடமான முயற்சியுடனும் செய்வீர்கள்.


கட்சிக்கூட்டங்களில் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. எவரையும் பகைத்துக் கொள்ளாமல் வார்த்தைகளில் கவனம் தேவை. கலைத்துறையினர் தங்கள் சொந்த முயற்சியால் சில


முக்கியமான ஒப்பந்தங்கள் பெறுவர். நல்ல பெயரும் புகழும் பெறுவர். சக கலைஞர்களிடம் இருந்த பிரச்னைகளை மறந்து நட்புடன் பழகினால் மேலும் சிறப்படைவர். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப் பொருள்கள் வாங்குவர். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவரிடம் ஒற்றுமையோடு நடந்து கொள்வர். மாணவமணிகள் சோம்பேறித்தனத்துக்கு இடம் தராமல்


பெற்றோர் மற்றும் ஆசிரியரின் அறிவுரைகளை மதித்து நடக்கவும். கல்வியில் முன்னேற்றமும் நல்ல மதிப்பெண்களும் கிடைக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தினால் வெற்றி கிட்டும்.


பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.தனுசுdhanusuதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
இந்த மன்மத ஆண்டில் உங்கள் குடும்பத்தில் அமைதி நிறைந்து காணப்படும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் அனுபவமிக்கவர்களின் துணை கிடைக்கும். கெடுதிகள் தானாகவே மறைந்து விடும். வேண்டியது அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக கிடைக்கும். மனதில் சலனமில்லாமல் தெளிந்த நீரோடையைபோல் ஆனந்தமாய் காரியமாற்றுவீர்கள். அனாவசிய பயமும் பறந்தோடிவிடும். செய்தொழிலில் உயர்வுகளைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளில் சிறு போராட்டங்களுக்குப்பிறகு லாபம் கிடைக்கும். சுயநலமாக இருக்கும் நண்பர்களை ஒதுக்கிவிட முடியாமல் என்ன செய்வது என்று யோசிப்பீர்கள்.


அடுத்தவர்களுக்கு பயன் கருதாமல் உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் புத்திக் கூர்மையாலும் உலக அனுபவத்தாலும் மற்றவர்களின் எண்ணங்களை மாற்றி உங்கள் சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளச் செய்து விடுவீர்கள். மேலும் நண்பர்களை நம்பி பண முதலீடு எதையும் செய்யக்கூடாது. உயர்வான நிலையை எட்டினாலும் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் சென்று அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உடலாரோக்கியம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவைகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்குவீர்கள். தன்னம்பிக்கையுடன் அன்பு கலந்து இன்சொல் பேசுவீர்கள். ஆடம்பரம் இல்லாத சாதனைகள் செய்யும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று தாமதத்துடன் பரிசீலிப்பார்கள். இதனால் கோபமடையாமல் பொறுமை காக்கவும். முடிவு சாதகமாக அமையும். மற்றபடி உங்கள் வேலைகளைக் கருத்தாகச் செய்து முடிப்பீர்கள். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே கிடைக்கும் ஆண்டாக இது அமைகிறது. வியாரபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல்களில் எந்தக் குறையும் ஏற்படாது. புதிய முதலீடுகளை கூட்டாளிகளை ஆலோசித்த பின்னரே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். அதேநேரம் பழைய கடன்களை வசூலித்தபிறகே புதிய கடன்களை கொடுக்கவும். சந்தையில் போட்டிக் கேற்றபடி விலையை நிர்ணயித்து லாபமீட்டுவீர்கள். விவசாயிகளின் திறமைகள் வீண்போகாது. விளைச்சலில் பெருக்கத்தைக் காண்பீர்கள். அதேசமயம் புழுபூச்சிகள் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறிது செலவு செய்ய நேரிடும். மேலும் சக விவசாயிகளுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். உபரி தொழில்களும் செய்ய முயற்சி செய்வீர்கள்.


அரசியல்வாதிகள் எந்தச் செயலையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்து வெற்றிகரமாக முடித்து விடுவார்கள். கட்சியில் அனுபவஸ்தர்களை கலந்து முக்கிய முடிவெடுப்பீர்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே முன்ஜாமீன் போடவும். பயணங்கள் செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.


கலைத்துறையினர் தேவையான வருமானத்தைக் காண்பார்கள். உங்கள் செயல்களில் சிறிய தடுமாற்றத்தைக் காண்பீர்கள். வெளியூர் நிகழ்ச்சிகள் நடத்தும்போது ரசிகர்களின் விருப்பங்களைக் கண்டறிந்து அவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப்பிறகே கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடமும் குடும்பத்தாரிடமும் நற்பெயர் வாங்குவார்கள். உடல்நலம் சீராக இருக்கும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்குவார்கள். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். மாணவமணிகள்


நல்லபடியாக படித்தால் அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெற முடியும். மேலும் கடுமையாக உழைத்துப்படிக்கும் மாணவர்கள் சாதனை செய்வார்கள். உடல்நலம் சிறப்பாக அமையும். அதனை கூட்டிக் கொள்ள வெளிவிளையாட்டுகளிலும் உடற்பயிற்சிகளிலும் தவறாமல் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு இருப்பதால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறக் காண்பீர்கள்.


பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.


மகரம்

makaramமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)


இந்த மன்மத ஆண்டில் காலத்தை வீணாக்காமல் கடினமாக உழைப்பீர்கள். பெருந்தன்மையோடு தியாகம் செய்வீர்கள். எந்தப் பிரச்னைக்கும் சரியான முடிவெடுப்பீர்கள். உங்களின் அறிவார்த்தமான பேச்சால் சமுதாயத்தில் பாராட்டப்படுவீர்கள். சுதந்திர ஆர்வத்துடன் திகழ்வீர்கள். செய்தொழிலில் ஊக்கத்துடன் பணியாற்றுவீர்கள். அரசு வகையில் சில சலுகைகள் கிடைக்கும். அரசு மரியாதை, கௌரவத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சகோதர சகோதரர்களிடம் அன்போடு பழகுவீர்கள். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று தொழில் செய்யும்படியான மாற்றங்களும் உண்டாகும். மேலும் மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களில் சில ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். வழக்கு விவகாரங்களிலிருந்து தள்ளி இருக்கவும். பெரிய பகை என்று எதுவும் ஏற்படாது. தவறான எண்ணங்கள் மனதில் ஏற்படுவதைத் தவிர்க்க, பெரியோர்களைத் தரிசிப்பது நன்மை பயக்கும். குழந்தைகளை சரியான பாதையில் இட்டுச் செல்வீர்கள். சில புதிய தொழில் நூட்பங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகம் போன்ற துறைகளின்மூலம் ஓரளவுக்கு வருமானம் கிட்டும். மனோபலம், சரீர பலம் இரண்டும் சீராக இருக்கும். போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டாலும் பெரிய சாதனைகளை எதிர்பார்க்க முடியாது. அதோடு எவரிடமிருந்தும் அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது போகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு திருப்புமுனைகள் ஏற்படும். உங்கள் வேலைகளை விருப்பு வெறுப்பின்றி செய்வீர்கள். மேலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்துவிடுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். மேலும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பெருமை உயரும். வியாபாரிகள் இந்த ஆண்டு லாபத்தையும் நஷ்டத்தையும் மாறிமாறி பார்ப்பார்கள். அடுத்தவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கூட்டு சேர்வது, கடன் கொடுப்பது ஆகியவற்றைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகள் எதையும் இந்த ஆண்டு தொடங்க வேண்டாம். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்திருந்து அரசிடம் சமர்ப்பிக்கவும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இடுபொருள்களைச் சகாய விலைக்கு வாங்குவீர்கள். நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லைகள் இராது. புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள். நிம்மதியாக உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். கால்நடைகளையும் இந்த ஆண்டு வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். இதனால் கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றபடி மக்களின் உண்மையான தொண்டுகளில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். தொண்டர்களிடம் அனாவசிய நெருக்கமும் வேண்டாம். உங்கள் கொள்கையில் உறுதியான நிலைபாட்டுடன் இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்குத் திறமைகள் பளிச்சிடும். தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களும்

கைகூடும். சக கலைஞர்களால் உங்கள் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாகத் தொடங்கும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்துகொண்டு அமைதி காப்பீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்ப வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள சுய தொழில்களில் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் வம்புகளிலும் வீண்பேச்சுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். பழைய தவறுகளைத் திருத்திக் கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படியுங்கள். தாழ்வு மனப்பான்மையை விட்டொழிங்கள். தேக ஆரோக்கியமும் மனவளமும் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்யுங்கள்.

பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.


கும்பம்


kumbam

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)


இந்த மன்மத ஆண்டில் உங்கள் தன்னம்பிக்கை வளரத் தொடங்கும். செய்தொழிலில் எதிர்பார்த்ததற்கும் மேலாக வருமானம் வரத் தொடங்கும். வீண் விரயங்களும் செலவுகளும் மறையும். நண்பர்கள் கூட்டாளிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தெய்வ பலத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் வெளிநாடுகளுக்கும் சென்று வருவீர்கள். சிலர் நவீன வாகனங்களை வாங்குவீர்கள். எச்சரிக்கையுடன் வாக்கு கொடுத்து அவைகளை சரியாகவும் காப்பாற்றி விடுவீர்கள். இதனால் நல்ல பெயர், புகழ் கூடும். கெட்டவர்களின் சகவாசமும் விலகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு அங்கேயே மழலை பாக்கியம் கிடைத்து இரட்டை குடியுரிமை கிடைக்கும். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும். மாற்றுக் கருத்துடையோரும் மனம் மாறுவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வந்து உங்கள் வாசல் கதவைத் தட்டும்.


ஒரு வீடு வாங்க நினைத்தவர்கள் அருகருகில் இரண்டு வீடுகளை வாங்குவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். மேலும் காலநேரங்களை பார்க்க முடியாமல் உழைப்பதால் தகுந்த ஓய்வு எடுத்துக் கொள்ள முடியாமல் போகும். பெற்றோர்கள் வழியில் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவர்களுக்கும் ஆரோக்கிய காப்பீடு செய்ய வேண்டிவரும். மற்றபடி உங்களைவிட்டு விலகியிருந்த உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். உங்கள் முகத்தில் புதுப்பொலிவு உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன்களும் திரும்பக் கிடைக்கும். திட்டமிடாது செய்யும் காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடந்து உங்களுக்கு அதன் மூலமும் வரத் தொடங்கும் ஆண்டாகவும் இது அமைகிறது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு கூடினாலும் உங்களின் வேலைகளைச் சரியாக செய்து முடிப்பீர்கள். இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு புது சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க நினைப்பீர்கள். சக ஊழியர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்கி விடுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வுகள் இந்த ஆண்டு தாமதப்படும். வியாபாரிகளின் திட்டங்கள் நல்ல லாபங்களைத் தேடித் தரும். கொடுக்கல்வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனை பிரதிநிதிகளை பல சந்தைகளுக்கு அனுப்பி உங்களின் பொருள்களை விற்பனை செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமூகத்தில் உங்களின் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகளை உபரிவருமானத்தால் திருப்பி செலுத்துவீர்கள். பூச்சி கொல்லி மருந்துக்கும் செலவு செய்வீர்கள். பாசன வசதிகளிலும் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்குப் பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். சக விவசாயிகளுடன் வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.


அரசியல்வாதிகள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பார்கள். மேலும் தொண்டர்களுக்குத் தேவையானவைகளைச் செய்து அவர்களின் அதிருப்தியிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். மற்றபடி பெயரும் புகழும் உயரும். உங்களின் எதிரிகளின் பலம் குறையும். எதிர்பார்த்த பதவிகள் உங்களைத் தேடி வரும். அரசு அதிகாரிகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கலைத்துறையினர் தொழில் வகையில் போட்டி பொறாமைகளைச் சந்தித்து வந்தாலும் உங்களின் முயற்சிகள் சீரிய முறையில் வெற்றி பெறும். புதிய நண்பர்களின் உதவியுடன் துறையில் புதிய நுணுக்கங்களை கற்றறிவீர்கள். அவர்களின் கூட்டுமுயற்சிகளால் சில வெற்றிகளை அடைவீர்கள். சிலர் ஆடம்பர வாகனங்களை வாங்குவார்கள். பெண்மணிகளுக்கு புத்தாடை அணிமணிகள் சேரும். வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். சமுதாயத்திற்கும் உங்களால் ஆன சேவைகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மேலும் உடலாரோக்கியம் சீரடையும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். உங்களின் அறிவாற்றலைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம்.


பரிகாரம்: சனி பகவானை வழிபட்டு வரவும்.மீனம்meenamமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
இந்த மன்மத ஆண்டில் நறுக்கென்று பேசி உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிகளை நேர்த்தியாக செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் கூட்டாளிகளின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். போட்டியாளர்களை தைரியமாக எதிர்கொள்வீர்கள். எடுத்த வேலைகளில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் ஊக்கத்தைக் கூட்டிக்கொண்டு தாமதமானாலும் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தோரிடம் இணக்கமாக இருப்பீர்கள். மேலும் உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் முதலீடுகளில் எச்சரிக்கையாக இறங்கவும். சில நேரங்களில் உங்கள் தன்னம்பிக்கை சற்றுக்குறையக் காண்பீர்கள். மற்றபடி குடும்பத்தினருக்கு உங்களாலான நன்மைகளைச் செய்ய முற்படுவீர்கள். வெளியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடலில் இருந்த நாள்பட்ட நோய்கள் மறையும். சிலருக்கு விசாலமான புதிய இல்லத்திற்கு மாறும் யோகமும் உண்டாகும். தடைபட்டிருந்த சுப காரியங்கள் நடக்கத் தொடங்கும். அதிகாரவர்க்கத்தினருடன் உங்கள் செல்வாக்கு கூடும். தீராத பிரச்னகள் தானாகத் தீர்ந்துவிடும். மற்றவர்களின் கருத்துக்களை கேட்டபிறகே உங்கள் கருத்துக்களை வெளியிடுவீர்கள். பயணங்கள் எதிர்பார்த்த பலனளிக்கும்.


உங்களின் செயல்களில் காணப்படும் தடைகளை அனுபவமிக்கவர்களின் துணையுடன் தகர்த்தெறிவீர்கள். பெற்றோரிடம் சுமுகமாக இருப்பீர்கள். உங்களின் அனைத்து செயல்களிலும் ஒரு பொதுநல நோக்கு இருக்கும். தற்காலத்திற்குத் தேவையான யுக்திகளை மாற்றிக்கொண்டு செயல்பட்டு புகழப்படுவீர்கள். இக்கட்டான நேரங்களில் ஒரு நிலையோடு நடந்து கொள்வீர்கள். உங்களின் கற்பனைத்திறன் புதிய படைப்புகளை உருவாக்கும். பழைய கடன்களையும் திருப்பி அடைப்பீர்கள். உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயங்களை களைய முயற்சி செய்வீர்கள். வழக்குகளை நீதி மன்றங்களுக்கு வெளியில் சமாதானமாக முடித்துக் கொள்வீர்கள். உங்களின் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பார்கள். வருமானமும் படிப்படியாக வளரும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாகவும் பக்கபலமாகவும் இருப்பார்கள். மேலும் அலுவலக வேலைகளில் தொந்தரவுகள் இராது. மேலும் உங்களைத் தவறான செயல்களில் ஈடுபடத் தூண்டும் சக ஊழியர்களிடமிருந்து விலகி விடுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களை இடையூறின்றி முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் மனத்திருப்தியுடன் வியாபாரத்தை நடத்துவார்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் குறையும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் குறிப்பிட்ட தேவைகளையும் எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து விடுவீர்கள். வியாபாரத்தை தனித் தன்மையுடன் நேர்மையாக நடத்தி பெயரெடுப்பீர்கள். சிறிய முதலீட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் கொட்டும். புதிய யுக்திகளைப் புகுத்தி வருமானத்தை அள்ளுவீர்கள். கால்நடைகளாலும் வருமானம் வரும். எதிர்பார்த்த கடன்கள் மானியத்துடன் கிடைக்கும். மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய கடன்களும் கைவந்துசேரும்.


அரசியல்வாதிகளுக்கு நேரடியாகத் தொல்லை கொடுத்தவர்கள் சற்று அடங்கி நடப்பார்கள். அதோடு அவர்களிடமிருந்து சற்று விலகியே இருக்கவும். மற்றபடி கட்சியில் உங்களின் திறமைக்கேற்ப புதிய பொறுப்புகள் கிடைக்கும். காலத்திற்கேற்றவாறு தற்கால நிலைமைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள முற்படுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பணம்வரும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளில் புதுப்பொலிவைக் காண்பீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். உழைப்பிற்கு அப்பாற்பட்டு பாராட்டப்படுவீர்கள். ரசிகர்கள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். சக கலைஞர்களின் நட்பு புதிய அனுபவங்களைக் கொண்டு சேர்க்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைக் கேட்காமலேயே செய்வீர்கள். புதிய வருமானம் தரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். மாணவமணிகள் அதிகம் உழைத்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவர். மனக்குழப்பங்களைத் தவிர்க்க தியானம், பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். விளையாட்டுகளிலும் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். மேலும் உடல்நலத்தில் சிறிது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிவரும். மற்றபடி பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com