புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் 11ஆம், 12ஆம் சந்தேக நபர்களாக கைதான இருவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசன் உத்தரவிட்டார்.
இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போதே பதில் நீதிபதி மேற்கணடவாறு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
குறித்த மாணவியின் படுகொலையோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேர் வரை கைது செய்யப்பட்டு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் படுகொலையோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் இருவர் கடந்த மாதமளவில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் 11ஆவது சந்தேக நபர் மாணவியின் படுகொலையை நேரில் பார்த்தவர் எனவும் கொலையாளிகளுக்கு போதை பொருட்களை விநியோகித்தவர் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த வழக்கு விசாரணைகளின் போது தெரிவித்திருந்தனர்.
அத்துடன், 12ஆவது நபர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, இக் கொலையோடு தொடர்புபட்ட மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்யவுள்ளதாக நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை மன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment