தற்கொலை அங்கி மீட்பு சர்வசாதாரண விடயமே: வடக்கு ஆளுநர் குரே தெரிவி­ப்­பு.


coயுத்தம் முற்­றுப்­பெற்­ற­தி­லி­ருந்து இன்­று­வ­ரையில் இரு­பத்­தைந்து தட­வை­க­ளுக்கும் அதி­க­மாக யாழில் வெடி ­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. எனவே சாவ­கச்­சே­ரியில் கிடைக்­கப்­பெற்ற தற்­கொலை அங்­கியும் வெடி­பொ­ருட்­களும் அவ்­வாறு மீட்­கப்­பட்­ட­வை­யே­யாகும் என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்தார்.இந்த விவ­கா­ரத்தை தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லென காண்­பிக்க தெற்கின் இன­வா­திகள் கடும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இறுதி யுத்­தத்தில் மக்­களின் இருப்­பி­டங்கள் கைப்­பற்­றப்­பட்­டமை காணாமல்போனோர் விவ­காரம் போன்ற­வையில் புலி­க­ளுக்கும் புலிகள் அல்­லாத வேறு குழுக்­க­ளுக்கும் தொடர்­புள்­ளது. எனவே இந்த விட­யத்தில் இரா­ணு­வத்­தி­னரைமாத்­திரம் காரணம் காட்­டு­வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.கொழும்பு பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள வடக்கு ஆளு­னரின் அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.அவர் மேலும் தெரி­விக்­கையில்


நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் சக­வாழ்­வையும் மேம்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டு­களை நல்­லாட்சி அர­சாங்கம் துரி­த­மாக முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்­நி­லையில் குறிப்­பி­டத்­தக்க மட்­டத்தில் சக­வாழ்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் இன­வா­தி­களால் இந்த நிலைப்­பாட்டை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.யுத்­த­தத்தை வென்­றதை விடவும் கடி­ன­மான விடயம் மக்கள் மனங்­களை வெல்­வ­தே­யாகும். அந்த இலக்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடைந்­துள்ளார். அதிகம் மக்கள் ஆத­ரவை பெற்­றுக்­கொண்ட தலைவர் என்றும் அவ­ரையே குறிப்­பிட முடியும்.அர­சாங்கம் இவ்­வா­றான கோணங்­களில் பய­ணிப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத இன­வாத சக்­திகள் சில நடை­முறைச் சிக்­கல்­களை காரணம் காட்டி இந்­நாட்டு அப்­பாவி மக்­களை திசை திருப்ப முற்­ப­டு­கின்­றனர். இவர்கள் தான் நேற்று முன்­தினம் யாழ்ப்­பாணம் சாவ­கச்­சே­ரியில் மீட்­கப்­பட்ட தற்­கொலை அங்கி மற்றும் வெடி­பொ­ருட்கள் விவ­கா­ரத்தை நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான செயல் என்று சுட்­டிக்­காட்ட முனை­கின்­றனர்.ஆனால் நான் இந்த விடயம் தொடர்பில் யாழ் கட்­டளைத் தள­பதி மஹேஸ் சேனா­நா­யக்­க­வு­ட­னான சந்­திப்பில் வின­விய போது அவர் யுத்தம் முற்­றுப்­பெற்­ற­தி­லி­ருந்து 25 தட­வை­க­ளுக்கும் அதி­க­மாக இவ்­வா­றான வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்தார். சாவ­கச்­சே­ரியில் மீட்­கப்­பட்ட சம்­ப­வமும் அவ்­வா­றா­தொன்றே என்றும் இதனை தேசிய பாது­கப்­புக்கு அச்­சு­றுத்தல் என்று குறிப்­பிட முடி­யா­தெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.எனவே இந்த விவ­காரம் தொடர்பில் போலி­யான செய்­திகள் பர­வு­கின்­றன. இதற்கு உட­ன­டி­யாக முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும். இல்­லா­விடின் கடந்த காலங்­களில் இடம்­பெற்­றது போன்ற கசப்­பான அனு­ப­வங்­களை சந்­திக்க நேரிடும். அவ்­வா­றான சூழ­லுக்கு முகம்­கொ­டுக்க மக்கள் தயா­ரில்லை. ஆனால் அர­சியல் வாதிகள் தமது கருத்­துக்­களை மக்­க­ளி­டையே திணித்து தமது கருத்­தையே மக்கள் கருத்­தாக்க முனை­வதால் இனங்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நல்­லி­ணக்கம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது.வடக்கில் உள்ள அப்­பாவி மக்கள் ஊட­கங்கள் மூலமோ அல்­லது வேறு வழி­யிலோ தமது கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­த­வில்லை. தெற்கு மக்­களும் அவ்­வாறே உள்­ளனர். மக்கள் நிலை­யான சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தை­யுமே எதிர்­பார்­க­கின்­றனர். மூவின மக்­களின் நிலைப்­பாடும் இது­வே­யாகும். ஆனால் இந்­நி­லைப்­பாட்டை மாற்றி இன­வாத கொள்­கைக்குள் மக்­களை ஈர்க்க சில குழுக்கள் முயற்­சிக்­கின்றர். அந்த குழுக்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும்.இன்று எமது நாடு மட்­டு­மல்­லாது இன­வாத குழுக்­களின் நெருக்­க­டியை முழு உல­கமும் எதிர்­கொண்­டுள்­ளது. இவ்­வா­றான சந்­திர்ப்­பத்தில் உள்­நாட்­டிலும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வதில் அர்த்­த­மில்லை. எமது நாட்டில் முப்­பது வருட யுத்த அனு­ப­வ­முள்ள பல­மிக்க இரா­ணு­வப்­படை உள்­ளது. அதனால் தேசிய பாது­காப்­புக்கு யாரும் இல­குவில் அச்­சு­றுத்தல் விடுக்க முடி­யாது என்­பதை கருத்­திற்­கொள்ள வேண்டும்.அதேபோல் தற்­போது மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­கின்­றன. இதன்­போது வடக்­கி­லி­ருந்து 24 மணி­மத்­தி­யா­லங்­களில் விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் மற்றும் சிங்­கள மக்­க­ளுக்கு நியாயம் வழங்­கப்­பட வேண்டும். இதனால் நல்­லி­ணக்கம் ஏற்­ப­வ­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் உரு­வாகும். மக்கள் மத்­தியில் தற்­போது நிலவும் இன மற்றும் மத ரீதி­யி­லான வேறு­பா­டு­களை களைந்து ஒற்­று­மையை மேம்­ப­டுத்­தவும் இதுவே சிறந்த முறை­யாக அமையும்.இவ்­வாறு இன்று நாட்டில் நல்ல செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க அர­சாங்கம் முயற்­சிக்கும் போது இன­வாத குழுக்­களின் செயற்­பா­டு­களால் அதற்கு முட்­டுக்­கட்­டை­யி­டப்­ப­டு­கின்­றது. 30 வரு­டங்கள் யுத்தம் இடம்­பெற்ற நாட்டில் மக்­களின் மனங்­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி நல்­லி­ணக்­கத்தை எவ்­வாறு நிலை­கொள்ளச் செய்­வது என்­பதும் எந்த அளவு கடி­ன­மா­னது என்­பதும் இன­வாத குழுக்­க­ளுக்கு விளங்­க­வில்லை.அதனால் இவர்கள் தற்­கொலை அங்கி மீட்பு விவ­காரம் போன்று கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் நைனா­தீவில் புத்தர் சிலை வைக்­க­போன விட­யத்தை இன­வாத ரீதியில் பார்த்­தனர். இந்த விட­யத்தில் கடற்­கரை பாது­காப்பு அதி­கா­ர­ச­பையின் அங்­கீ­காரம் வேண்டும் என்று குறிப்­பி­டப்­பட்ட எழுத்­து­மூல ஆவ­ணங்கள் இருக்­கின்ற நிலை­யிலும் ஊட­கங்­களில் வெளி­யான தவ­றான செய்­தி­களை மையப்­ப­டுத்தி அந்த விட­யத்­திலும் இன­வா­தத்தை தூண்­டி­விட முற்­பட்­டனர்.இவர்­களை விட இன்று ஊட­கங்கள் செயற்­படும் விதமும் வேத­னை­யா­க­வுள்­ளது. நைனா­தீவு விவ­காரம் பூதா­க­ர­மா­வ­தற்கு அடித்­த­ள­மற்ற தக­வல்­களை வெளி­யிட்ட ஊட­கங்­களே பொறுப்­பு­கூற வேண்டும். ஊட­கங்கள் செய்­தி­களை திரி­பு­ப­டுத்தி வெளி­யி­டு­கின்­ற­மையே சிக்கல் தோன்ற பிர­தான கார­ண­மா­கி­யுள்­ளது.அர­சாங்கம் வடக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பெரிதும் அக்­கறை செலுத்­து­கின்­றமை குறித்து தவ­றான கண்­ணோட்­டத்தில் பாரக்­கப்­ப­டு­கின்­றது. வடக்கு மக்­களின் வாழ்க்கை தரத்தை மேம்­ப­டுத்­து­வதால் தெற்கு மக்களை கவனிக்கவில்லை என்று பொருள்படாது. ஒப்படளவில் பார்க்கின்ற போது வடக்கு மக்களின் பிரச்சினைகள் அதிகமாகவுள்ளன. அதனால் அவர்களின் ஜீவனோபாய மேம்பாடு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.இதனையும் இனவாத கண்ணோட்டத்தில் பார்க்கும் சில தரப்புக்களுக்கு நல்லிணக்கம் என்ற வார்த்தையும் வேடிக்கையாகவுள்ளது. இன்று விஞ்ஞானம் கற்பதைவிடவும் அரசியல் பாடம் கற்பதே கடினமாக உள்ளது. பல்வேறு பட்ட கருத்து வேறுபாடுகளை கொண்ட மக்கள் குழுக்களை நிர்வகிப்பது மிகக் கடினமான செயலாகும். எனவே ஊடகங்களும் பொறுப்பான வித்தில் செய்திகளை வெளியிட்டு நடைமுறை சிக்கல்கள் ஏற்படாதிருக்க வழிசெய்ய வேண்டும் என்றார்.


 

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com