இலங்கை இராணுவத்தின் கடற்படைநீச்சல் குழுவினரும் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் வெடிபொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை செயலிழக்கச் செய்யும் மொபைல் பிரிவும் இணைந்து பயிற்சி நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
கடற்படை நீச்சல்குழுவின் 22 பேர் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி இதில் பங்கேற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
யுத்த காலத்தில் குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டு சென்று இதுவரை வெடிக்காதிருக்கும் குண்டுகள் மற்றும் ஏனைய யுத்த உபகரணங்களை நீக்குவதற்காக விஷேட பயிற்சியை வழங்குவது இப்பயிற்சியின் நோக்கமாகும்.
10 நாட்கள் இடம்பெறும் இப்பயிற்சி வேலைத் திட்டத்திற்கு கொள்கை மற்றும் நடைமுறை செயற்பாடுகள் பல உள்ளடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment