ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் செயலாளரும் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கப்போவதாக பரவியுள்ள வதந்தியில் எவ்வித உண்மையுமில்லை.
நான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விட்டுப்பிரிந்து செல்லப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
கட்சிக்குள் சவாலுக்குள்ளாகியுள்ள ஜனநாயகத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது.
இது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காக போராட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எம்.ரி. ஹசன் அலியும் பசீர் சேகுதாவூதும் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றினை உருவாக்குவதற்கான முயற்சித்து வருகின்றனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
செயலாளர் ஹசன் அலி தொடர்பாகவும் என்னைப் பற்றியும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இரண்டு அரசியல் உச்சபீட உறுப்பினர்கள் தொடர்பாகவும் பலர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கட்சிக்குள் சமத்துவம் இருக்க வேண்டும். அங்கு ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
மதிக்கப்பட வேண்டும். இந்தக் குறைகளை நாம் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இது எமது ஒவ்வொருவரினதும் கடமையாகும்
கட்சி தவறுதலாக உயர்பீட உறுப்பினர்களான இரண்டு மௌலவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். அடுத்தவர் இடை நிறுத்தப்பட்டுள்ளார். எனவே கட்சிக்குள் ஜனநாயகம் சவாலாகியுள்ளமை தெளிவாகிறது என்றார்.
0 comments:
Post a Comment