நயன்தாரா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சிம்புவிடம் காதல் தோல்வி, பின் பிரபுதேவாவிடம் தன் வாழ்க்கையையே பறிகொடுத்தது, தற்போது ஆர்யாவுடன் காதல் கிசுகிசு என சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் நயன்தாரா.
இவ்வளுவு சர்ச்சைகள் பின் தொடர்ந்தும் கூட, நயன்தாராவிற்கு மார்க்கெட் உயர்ந்துகொண்டே தான் செல்கின்றது. ராஜா ராணி, ஆரம்பம் என ஹிட் கொடுத்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் நயன்தாரா.
பெரிய ஹீரோக்களுடன் மட்டும் நடிக்காமல் ‘அனாமிகா’ போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடிகின்றார். இதற்கு காரணம் பாலிவுட் நடிகை வித்யா பாலனை முந்த வேண்டும் என்பதே.
இதற்காக சிறிய ஹீரோக்களுடன் நடித்தாலும் பரவாயில்லை, என ஒப்புக்கொள்கின்றார். அப்படி ஒப்புக்கொண்ட படம் தான், அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படம். இப்படம் திகில் நிறைந்த பேய் படமாம்.
இதில் முழுக்க முழுக்க நயன்தாராவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரமாம். இந்த படத்தில் ஒரு கைக்குழந்தைக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
தற்பொழுது நயன்தாரா இந்த படத்தில் கர்பிணிப்பெண்ணாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் இளம் இயக்குனர் அஷ்வின் சரவணன் தானாம். கர்ப்பிணி பெண்ணாக நடிப்பதன் மூலம், ரசிகர்களின் அனுதாபம் அதிகமாக கிடைக்கும் என கூறி நயன்தாராவை கர்ப்பமாக்க முடிவு செய்துள்ளார்.
ஒரு புதிய இயக்குனர் படத்தில், நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும், கர்ப்பிணி பெண்ணாகவும் நடிக்க சம்மதித்துள்ளது திரை பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
0 comments:
Post a Comment