வவுனியாவில் வசந்தகாலத்தை வரவேற்று
பூத்துக்குலுங்கி நகரை அழகுமயமாக மாற்றும் மரங்கள் பல இன்று அபிவிருத்தி என்ற போர்வைக்குள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறாக எல்லா இடமும் அழிக்கப்பட்டு தற்போது நீதிமன்றத்திற்கு முன்னாலும் வவுனியா தெற்கு வலயத்திற்கு முன்னாலுமே இவ் வசந்த கால மரம் தனித்து எஞ்சி நிற்கின்றது.
இவ்வாறு நகரை அழகு படுத்திய மரங்கள் அழிக்கப்பட்டாலும் அதற்குப்பதிலான மரங்கள் இதுவரை எங்கும் நடப்படவும் இல்லை.
இதே வேளை போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் நடப்பட்ட நிழல் தரு வாகை மரங்கள் வவுனியாபிறவுண் கம்பெனியில் இருந்து தாண்டிக்குளம் வரை ஏ9 வீதி நெடுங்கிலும் இருபக்கமும் நின்று ஏ9 வீதியால் செல்வோருக்கு நிழலை மட்டுமன்றி எமது தொண்மைய வரலாற்றையும் விளக்கியபடி நின்ற அத் தருக்களும் இருந்த அடம் தெரியாமல் அழிக்கப்பட்டு ஒரு சிலவே எஞ்சி நிற்கின்றன.
இவைக்கும் அகாலமரணம் எப்பபோது என்று அறிய முடியவில்லை.
எனினும் எது எவ்வாறிருப்பினும் எமதுத்தியை பிரதேசத்தின் இயற்கை வனப்போடு வசந்தத்தை வரவேற்று வவுனியாவுக்குள் வந்து செல்வோருக்கு வரலாற்றை விளக்கும் பெறுமதிகள் கணிக்கமுடியாத இத் தருக்களை அபிவிருத்தியை காரணம் காட்டி அழிப்பதை இம் மண்ணின் மைந்தர்கள் என்ற வகையில் எம்மால் ஏறறுக் கொள்ள முடியாததே.
அபிவிருத்தி அவசியமானதே ஆனால் இயற்கையின் வனப்பை அழிக்காமல் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியுமே.
அபிவிருத்தி செய்தோம் என்று எம் வருங்கால தலைமுறைக்கு பாலை வனத்தை கையளித்து செல்லாமல் தடுக்க உரிய அதிகாரிகள், மண்ணின் மைந்தர்கள நடவடிக்கை எடுப்பார்களா.
0 comments:
Post a Comment