வவுனியா - புபுதுகம பிரதேசத்தில், கணவரை மனைவி கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் குறித்த பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
எஸ்.எஸ்.திசாநாயக்க (வயது 43) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டையிடுவதாகவும் அதேபோன்று செவ்வாய்க்கிழமை (19) இரவும் இவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் சண்டையிட்ட பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பிரதேச வாசிகள் தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment