தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் சந்தேகநபர்களை தொடர்ந்தும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சட்டமா அதிபர் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து எழுத்துமூல வாதங்களை முன்வைக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் தற்போது சுமார் ஒரு வருட காலமாக காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு அவர்களை இவ்வாறு விசாரணை செய்ய (காவலில் வைத்து விசாரிக்க) சட்டமா அதிபரால் அனுமதி கோரப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு எதிர்ப்பு வௌியிட்டுள்ள பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள், இவ்வாறு நீண்டகாலம் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோருவது அரசியலமைப்புக்கு முரணானது என கூறியுள்ளனர்.
இவ்வாறான உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்தால் முடியாது என சுட்டிக்காட்டிய அவர்கள் குறித்த கோரிக்கையை நிராகரிக்குமாறும் குறிப்பிட்டனர்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க, இது தொடர்பிலான எழுத்து மூல வாதங்களை மே மாதம் 16ம் திகதி முன்வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment