பண்டாரவளை எல்ல பிரதேசத்தில் அமைந்திருக்கும் கருணாகொட பிரதேச இராவணன் மலை நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள மலைத் தொடரில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் இராவணனின் வஸ்து ஒன்றை எடுப்பதற்காக மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயது யுவதியான நிசார லக்சானி சென்றுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தனது கனவில் கடவுள் வந்து இராவணன் வசம் இருந்த சக்தி மிக்க வஸ்து பொருள் ஒன்று இங்கு இருப்பதாகவும், அதை எடுக்கும் படியும் கட்டளை இட்டதற்கு இணங்க, அதை கைப்பற்றும் நோக்கத்துடன் தான் இங்கு வந்ததாக கூறினார்.
இவருடன் ஊடகவியளாலர்கள் மற்றும் பாதுகாப்பாளர் 8 பேர் அடங்கியவர்கள் ஆபத்து மிக்க மலையில் அமைந்துள்ள குகையில் மிக பாதுகாப்புடன் உள் நுழைந்தனர்.
பாதுகாப்புக்கான குழுவினரும், ஏனையவர்களும், ஓர் குறிப்பிட்ட தூரத்துடன் நிறுத்திய பின் குறிப்பிட்ட யுவதியும் மற்றும் ஒருவரும் அந்த மர்ம வஸ்துவை எடுக்க செல்ல எத்தனிக்கும்போது பிரதேச மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்ட காரணத்தால் இவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிறகு பிரதேச மக்களுக்கும், இவர்களுக்கும் தர்க்கங்கள் ஏற்பட்டு காவல்துறையினர் தலையிட்டு அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
அந்த மர்ம வஸ்து கிடைத்தால் கடவுள் சக்தியை இப்பெண் அடையலாம் என்றும் இந்த யுவதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கையை பொறுத்த வரை இராவணன் தொடர்பான மர்மங்களும், சந்தேகங்களும் இன்றும் நிலவிய வண்ணமே உள்ளது
0 comments:
Post a Comment