மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு 10 ஆம் குறுக்கில் வீடொன்றிலிருந்து நபர் ஒருவர் கத்திக் குத்திக் குத்துக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (25) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வேலாயுதம் புஸ்பாகரன் எனும் 51 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறே கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபருடன் சண்டையில் ஈடுபட்டவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment