பொதுவாக ஒரு பழமொழி அல்லது வாக்கியம் கேள்வி பட்டிருப்பீர்கள், எதையும் ஆக்குதல் தான் கடினம், அழிப்பது எளிது என. அப்படி தான் பெண்களும், பெண்களை முழுமையாக மகிழ்விப்பது தான் கடினம், ஆனால், எளிதாக மூடவுட் ஆக்கிவிடலாம்.
அவர்களுக்கு பிடித்த விஷயங்களில் மூக்கை நுழைத்து குழப்பிவிடுவது, பிடித்த நபர்களை கேலி கிண்டல் செய்து நக்கலடிப்பது, அவர்கள் முன்னணியில் வேறு பெண்களை பெருமையாக பேசுவது, முன்னுரிமை அளிப்பது என சில விஷயங்களை செய்தால் பெண்கள் சடாரென்று மூடவுட் ஆகிவிடுவார்கள்.
இது எளிது தான், ஆனால், மீண்டும் அவர்களை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு நீங்கள் சிரமப்பட வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்…
உண்மை
உண்மை என்றாலும் அவர்களுக்கு பிடிக்காதவற்றை செய்துவிட்டு உண்மைவிளம்பி என்று அவர்களிடம் போய் கூறும் போது அவர்கள் மூடவுட் ஆவார்கள்.
இன்பதிர்ச்சி
அவர்களின் முன்னர் வேறு பெண்ணுக்கு நீங்கள் இன்பதிர்ச்சி அளித்தால் அவர்கள் மூடவுட் ஆவார்கள்.
கால்
அவர்கள் கால் செய்து நீங்கள் முதல் ரிங்கிலேயே பேசிவிட வேண்டும். நாலைந்து முறை கால்களை மிஸ் செய்துவிட்டால் அவர்கள் மூடவுட் ஆகிவிடுவார்கள். சில பெண்கள் தொடர்ந்து 30 – 40 முறை கூட அழைத்துக் கொண்டே இருப்பார்கள்.
சில்லவுட்
அவர்கள் செம கடுப்பில் இருக்கும் போது சிரித்து கொண்டே சில்லவுட் பேபி என்றால் பத்திரகாளியாக மாறிவிடுவார்கள்.
பட்டப்பெயர்
பெண்களுக்கு செல்லமாக தான் பட்டப்பெயர் வைக்க வேண்டும். நீங்கள் நாய், பூனைக்கு வைப்பது போல பட்டப்பெயர் வைத்தால் மூடவுட் ஆவார்கள்.
சத்தியம்
சத்தியத்தை மீறும் போது எல்லா பெண்களுமே மூடவுட் ஆவதுண்டு.
பிடித்த நபர்கள்
அவர்களது நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள் என அவர்களுக்கு பிடித்த நபர்களை நீங்கள் அவமதித்து நடக்கும் போது அதிகமாக மூடவுட் ஆவார்கள்.
முன்னுரிமை
அவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் நீங்கள் வேறு நபர்களுக்கு முன்னுரிமை அளித்தால் பெண்கள் கண்டிப்பாக மூடவுட் ஆவார்கள்.
0 comments:
Post a Comment